கேரள ஓணம் பம்பர் ரூ.30 கோடி முதல் பரிசுதான்.. ஆனால் ஜெயிச்சால் எவ்வளவு கையில் கிடைக்கும் தெரியுமா?

  • திருவனந்தபுரம்: கேரளா திருவோணம் பம்பர் லாட்டரியின் முதல் பரிசுத் தொகை கடந்த ஆண்டை விட ரூ.5 கோடி அதிகரிக்கப்பட்டு ரூ.30 கோடி வழங்கப்படுகிறது. முதல் பரிசு 30 என்பதால் பரிசு அடித்தால் அப்படியே நமக்கு முழு தொகையும் கிடைத்துவிடாது. ஏனெனில் 30 கோடியில்தான் வரி மற்றும் ஏஜெண்ட் கமிஷன் பிடித்தம் செய்யப்படும். 10 சதவீதம் ஏஜெண்ட் கமிஷனாக பிடித்தம் செய்யப்படும். டிடிஎஸ் ஆக 30 சதவீதம் பிடித்தம் செய்யப்படும். அதுபோக சர்ஜார்ஜ் மற்றும் சுகாதாரம் & கல்விக்கு செஸ் வரியாக 4 சதவீதம் பிடித்தம் செய்யப்படும். இவையெல்லாம் கழித்தே பரிசுத் தொகை வழங்கப்படும்.

    Advertisement

    கேரள ஓணம் பம்பர் லாட்டரிக்கான பரிசுத்தொகை இந்த ஆண்டு ரூ.30 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு வரை ரூ.25 கோடியாக முதல் பரிசு இருந்த நிலையில், தற்போது பரிசுத்தொகை ரூ.5 கோடி உயர்த்தப்பட்டு இருப்பது கேரள லாட்டரி பிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டிக்கெட் விலை ரூ.500 ஆகவே தொடர்கிறது.

    Advertisement

    பரிசுத் தொகை ரூ.30 கோடியாக உயர்வு

    பரிசுத்தொகை மட்டும் உயர்ந்து இருப்பதால் லாட்டரி பிரியர்கள் ஆர்வத்துடன் வாங்கி குவித்து வருகிறார்கள். மொத்தம் 90 லட்சம் டிக்கெட்டுகளை கேரள லாட்டரித்துறை அச்சடிக்க திட்டமிட்டுள்ள நிலையில், மொத்த டிக்கெட்டுகளும் இந்த ஆண்டு விற்று தீர்ந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டிக்கெட் குலுக்கல் செப்டம்பர் மாதம் 26 ஆம் தேதி நடைபெறுகிறது. குலுக்கலுக்கு இன்னும் சரியாக 26 நாட்கள் மட்டுமே பாக்கியிருக்கும் நிலையில், தற்போதே 44.82 லட்சம் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்துவிட்டன.

    முழு தொகையும் கிடைக்காது

    இந்த டிக்கெட்ட் ஒன்றிற்கு அரசுக்கு ஏஜெண்ட்கள் கொடுக்கும் தொகை ரூ.390 ஆகும். (ஜிஎஸ்டி இல்லாமல்). இதனால், தற்போது வரை லாட்டரி விற்பனையில் கேரள அரசும் 174 கோடி ரூபாய் குவித்துள்ளது. இன்னும் பாதி நாட்கள் இருப்பதால், 300 கோடிக்கு மேல் வருவாயை கேரள அரசு ஈட்டும் எனத் தெரிகிறது. லாட்டரியில் பரிசு பெற்றவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள ரூ.30 கோடியில் முழு தொகையும் அதிர்ஷ்டசாலிகளுக்கு கையில் கிடைக்காது.

    Advertisement

    ஏனெனில் 30 கோடியில்தான் வரி மற்றும் ஏஜெண்ட் கமிஷன் பிடித்தம் செய்யப்படும். 30 கோடி என்றாலும் கையில் கிடைக்க போகும் தொகை என்னமோ சுமார் 15 கோடிதான். ஏனெனில், 10 சதவீதம் ஏஜெண்ட் கமிஷனாக பிடித்தம் செய்யப்படும். இதன்படி பார்த்தால் ரூ.3 கோடி ஏஜெண்ட்களுக்கு சென்றுவிடும். அதுபோக டிடிஎஸ் ஆக 30 சதவீதம் (ரூ8.1 கோடி) பிடித்தம் செய்யப்படும். அதுபோக சர்ஜார்ஜ் மற்றும் சுகாதாரம் & கல்விக்கு செஸ் வரியாக 4 சதவீதம் பிடித்தம் செய்யப்படும்.

    கையில் எவ்வளவு கிடைக்கும்?

    இதையெல்லாம் கழித்து ஓணம் பம்பர் லாட்டரி வின்னருக்கு வெறும் ரூ.15.46 கோடி மட்டுமே கிடைக்கும். அட பரிசுத்தொகை பாதியாக குறைந்துவிட்டதே என அதிர்ச்சியாக உள்ளது. ரூ.30 கோடி பரிசுத்தொகை என்றாலும் உண்மையில் வரிப்பிடித்தம் போக இந்த தொகையே தோராயமாக கையில் கிடைக்கும் என்பதே உண்மை.

    Advertisement

    ஓணம் பம்பரில் 30 கோடி முதல் பரிசு மட்டுமின்றி இரண்டாவது பரிசாக ரூ.1 கோடி 20 பேருக்கு வழங்கப்படுகிறது. 3-வது பரிசாக ரூ.25 லட்சம் 20 டிக்கெட்டுகளுக்கு வழங்கப்படுகிறது. ஆறுதல் பரிசாக ரூ.5 லட்சம் வழங்கப்படும். 10 டிக்கெட்டுகளுக்கு இந்த பரிசுத்தொகை வழங்கப்படும்.

    English Summary

    Kerala Onam Bumper offers a first prize of ₹30 crore: However, winning the ₹30 crore prize does not mean receiving the entire amount in hand. Deductions for taxes and agent commissions are made from this total. Agent commission is deducted at 10 percent, and TDS (Tax Deducted at Source) is deducted at 30 percent. Additionally, a 4 percent surcharge and a Health & Education Cess are deducted. The prize money is disbursed only after all these deductions are made.