திருவனந்தபுரம்: கேரள ஓணம் பம்பரில் ரூ.30 கோடி பரிசுத்தொகை வென்றது யாராக இருக்கும்.. ஒருவேளை தமிழ்நாடு போன்ற அண்டை மாநிலத்தவர்களுக்கு பரிசு போய்விட்டதா? இல்லை வெற்றியாளர் வேண்டும் என்றே தலைமறைவாக உள்ளாரா? என லாட்டரி பிரியர்கள் பரபரப்புடன் காத்துக்கொண்டு இருக்க லாரி டிரைவர் ஒருவருக்கு பரிசு அடித்ததாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவி வருகின்றன. இது உண்மையா? என்ற விவரங்களை பார்க்கலாம்.
கேரள ஓணம் பம்பர் லாட்டரியில் ரூ.30 கோடி முதல் பரிசு TL 360615 என்ற எண்ணிற்கு அடித்தது. சக்கரக்கல் தாலுகாவில் உள்ள தம்புரன் லாட்டரி ஏஜென்சியிடம் இருந்து லாட்டரியை வாங்கிய எம்.வி சுஜித் என்பவர் விற்பனை செய்த லாட்டரிக்குதான் முதல் பரிசு விழுந்துள்ளது. குலுக்கல் நடைபெற்று மூன்று நாட்கள் முடிவடைய போகிறது ஆனால் இன்னமும் 30 கோடி ரூபாய் வென்ற அதிர்ஷ்டசாலி என்ன ஆனார் என்ற விவரம் இல்லை.
இதற்கிடையே, கன்னூர் அருகே உள்ள மோகேரி பகுதியை சேர்ந்த லாரி டிரைவர் ஒருவருக்கு முதல் பரிசு விழுந்தாக கேரளாவில் இன்று பரபரப்பு கிளம்பியது. மாட்டனூர் வழியாக லோடு ஏற்றி சென்று கொண்டிருந்த போது லாரி டிரைவர் மானு டிக்கெட் வாங்கியதாகவும், அவர் தனது டிரக்கிலேயே வைத்து இருந்த டிக்கெட்டை சமீபத்தில் எடுத்து பார்த்த போதுதான் பரிசு அடித்தது தெரியவந்ததாகவும் கேரளாவில் காட்டூத்தீ போல செய்திகள் பரவின. வட்டோலி பகுதியில் உள்ள கனரா வங்கியில் அவர் பரிசு விழுந்த டிக்கெட்டை சமர்பித்து இருப்பதாகவும் கேரள சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவின. இதனால், ஓணம் பம்பரில் பரிசு வென்ற அதிர்ஷ்டசாலியை மூன்று நாளாக தேடி வந்த கேரள லாட்டரி பிரியர்கள், சஸ்பென்ஸ்க்கு விடை கிடைத்துவிட்டதாக நினைத்த நிலையில், லாரி டிரைவருக்கு பரிசு அடித்ததாக பரவிய தகவல்கள் எதுவும் உண்மை இல்லை என்று கேரள ஊடகங்கள் மறுப்பு தெரிவித்துள்ளன். ஏஐ மூலமாக சித்தரிக்கப்பட்ட இதுபோன்ற செய்திகள் பரப்பப்படுவதாகவும் வெற்றியாளர் யார் என்பது தற்போது வரை தெரியவரவில்லை எனவும் அங்குள்ள ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஓணம் பம்பரில் பரிசு வென்ற அதிர்ஷ்டசாலி யார் என்பது இன்னும் தெரியாத நிலையில் பரிசு அடித்த அதிர்ஷ்டசாலி வெளி மாநிலத்தை சேர்ந்த தொழிலாளியாக இருக்கலாம் எனவும் பரிசு விழுந்தது தெரியாமல் கூட இருக்கலாம் எனவும் பல்வேறு யூகங்களும் பரவி வருகின்றன. பரிசு வென்றது வெளியில் தெரிந்தால் நண்பர்கள், உறவினர்கள் தொந்தரவு அதிகரிக்கும் என்பதால், சில நாட்கள் கழித்து அதிர்ஷ்டசாலி ரகசியமாக வைத்து பரிசுத்தொகையை உரிமை கோர வாய்ப்பு உள்ளது என்றும் கேரள லாட்டரி பிரியர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்படுகிறது. குலுக்கல் முடிந்து 3 நாட்கள் ஆகியும் வெற்றியாளரை இன்னும் கண்டறிய முடியாததால், கேரள லாட்டரி பிரியர்கள் தங்கள் கைவசம் இருக்கும் டிக்கெட்டை எதற்கும் ஒருமுறை பார்த்துக்கொள்வோம் என்று திரும்ப திரும்ப பார்த்து ஏமாந்து கொள்வதோடு, வெற்றியாளரை வலை வீசி தேடி வருகிறார்கள். பரிசு வென்ற அதிர்ஷ்டசாலி 30 நாட்களுக்குள் டிக்கெட்டை சமர்பிக்க வேண்டும் என்பது விதியாகும்.லாரி டிரைவருக்கு முதல் பரிசு
வெளி மாநிலத்தவருக்கு அடித்ததா?
30 நாட்களுக்குள் சமர்பிக்க வேண்டும்