Pooja Bumper: கேரள லாட்டரி பிரியர்களுக்கு அடுத்த சர்ப்ரைஸ்! வந்தாச்சு பூஜா பம்பர்! ரூ.12 கோடியை அள்ளப் போவது யார்?

  • திருவனந்தபுரம்: ஓணம் பம்பர் லாட்டரி குலுக்கல் நடந்து முடிந்துள்ள நிலையில் தற்போது, கேரளாவில் பூஜா பம்பர் லாட்டரி (Kerala Pooja Bumper) விற்பனை இன்று முதல் தொடங்கியுள்ளது. ரூ.12 கோடி முதல் பரிசு கொண்ட இந்த லாட்டரி டிக்கெட் ஒன்றின் விலை ரூ.300 ஆகும். இதன் பரிசு விவரங்கள் மற்றும் குலுக்கல் எப்போது நடைபெறும்? என்ற விவரங்களை இங்கு முழுமையாக காணலாம்.

    Advertisement

    லாட்டரி பிரியர்கள் எதிர்பார்த்த திருவோணம் பம்பர் லாட்டரி குலுக்கல் நடந்து முடிந்த நிலையில் தனக்கு முதல் பரிசு அடிக்கும் என எதிர்பார்த்து ஏமாற்றமடைந்தவர்கள் தற்போது பூஜா பம்பர் லாட்டரியின் பக்கம் கவனத்தை திருப்பியுள்ளனர்.

    Advertisement

    பூஜா பம்பர் லாட்டரி

    கேரளாவில் கடந்த 26 ஆம் தேதி ஓணம் பம்பர் லாட்டரி குலுக்கல் நடைபெற்று முடிந்தது. இதையடுத்து, அடுத்த பம்பர் லாட்டரியை கேரள அரசு வெளியிட்டுள்ளது. பூஜா பம்பர் லாட்டரி டிக்கெட்டை கடந்த 26 ஆம் தேதி ஓணம் லாட்டரி குலுக்கலின் போது அறிமுகம் செய்யப்பட்டது. இந்த டிக்கெட்டின் விற்பனை இன்று முதல் தொடங்கும் என கேரள லாட்டரித்துறை தெரிவித்துள்ளது..

    Kerala Lottery: கேரள ஓணம் பம்பரில் 30 கோடி வென்ற அதிர்ஷ்டசாலி! பரிசு வென்றவர் ரகசியம் காப்பதால் நீடிக்கும் சஸ்பென்ஸ்
    Advertisement

    ரூ.300 மதிப்பு கொண்ட இந்த லாட்டரிக்கு முதல் பரிசாக ரூ.12 கோடி வழங்கப்படுகிறது. மொத்தம் 5 சீரியஸ்க்ளில் டிக்கெட்டுகள் அச்சடிக்கப்பட்டுள்ளன. JA, JB, JC, JD மற்றும் JE ஆகிய சீரியஸ்களில் டிக்கெட்டுகள் விற்பனைக்கு விடப்பட்டுள்ளன. மொத்தம் 45 லட்சம் டிக்கெட்டுகளை அச்சிட கேரள லாட்டரித்துறை திட்டமிட்டுள்ளது. இரண்டாவது பரிசாக ரூ.50 லட்சம் 10 டிக்கெட்டுகளுக்கு வழங்கப்படும்.

    குலுக்கல் எப்போது நடைபெறும்?

    மூன்றாவது பரிசாக ரூ.5 லட்சம், 10 டிக்கெட்டுகளுக்கு வழங்கப்படும். 4 வது பரிசாக ரூ.3 லட்சம் 5 டிக்கெட்டுகளுக்கும் 5-வது பரிசாக ரூ. 1 லட்சம் 4 டிக்கெட்டுகளுக்கும் வழங்கப்படும். ஆறுதல் பரிசாக ரூ.1 லட்சம் 4 வின்னர்களுக்கு வழங்கப்படும். ஆறுதல் பரிசு என்பது பரிசு விழுந்த அதே எண்ணை கொண்டிருந்தாலும் சீரியஸ் மட்டும் மாறியிருக்கும் டிக்கெட்டுகளுக்கு வழங்கப்படும்.

    Advertisement

    ரூ. 5 ஆயிரம் பரிசுத்தொகை 8,100 டிக்கெட்டுகளுக்கும், ரூ.500 பரிசுத்தொகை 1,29,600 டிக்கெட்டுகளுக்கும், ரூ.300 பரிசுத்தொகை 1,40,400 டிக்கெட்டுகளுக்கும் வழங்கப்படும். இந்த டிக்கெட்டிற்கான குலுக்கல் வரும் நவம்பர் மாதம் 28 ஆம் தேதி பிற்பகல் 2 மணிக்கு திருவனந்தபுரத்தில் உள்ள கோர்கி பவனில் நடைபெறும். ஓணம் பம்பரில்தான் பரிசு விழவில்லை பூஜா பம்பரில் தட்டி தூக்கிர வேண்டியதுதான் என்று லாட்டரி பிரியர்கள் தற்போதே பூஜா பம்பர் மீது கண் வைக்க தொடங்கிவிட்டனர்.

    தினந்தோறும் ரூ.1 கோடி பரிசு

    கேரளாவை பொருத்தவரை அங்கே தினம் தோறும் லாட்டரி விற்பனை நடைபெறுகிறது. தினமும் ஒரு கோடி பரிசுத்தொகை கொண்ட லாட்டரிகள் விற்பனை செய்யப்படுகிறது. இதன் விலை ரூ.50 ஆகும். அதுபோக வருடத்திற்கு ஆறு பம்பர் டிக்கெட்டுகளும் விற்பனை செய்யப்படுகிறது. கிறிஸ்துமஸ் நியூ இயர் பம்பர் லாட்டரி, சம்மர் பம்பர் லாட்டரி, விஷு பம்பர் லாட்டரி, மான்சூன் பம்பர் லாட்டரி, ஓணம் பம்பர் லாட்டரி, பூஜா பம்பர் லாட்டரி என சீசனுக்கு ஏற்றார் போல் 6 பம்பர் லாட்டரி டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுகின்றன.

    Advertisement
    Kerala onam lottery 2026: ஒரே நைட்டில் கோடீஸ்வரரானது இவர் தான்! கையில் எவ்வளவு கிடைக்கும் தெரியுமா?

    தற்போது நடந்து முடிந்துள்ள ஓணம் பம்பர் லாட்டரியில் முதல் பரிசானது கன்னூரில் விற்கப்பட்ட டிக்கெட்டுக்கு விழுந்துள்ளது. இதுவரை பரிசு விழுந்தவரின் விவரம் தெரியவில்லை. பெரும்பாலும் 2 அல்லது 3 நாட்களில் வின்னர் யார் என்பது தெரிந்துவிடும். ஆனால் இந்த முறை இன்னும் வின்னர் யார் என தெரியாதது கேரள சேட்டன்கள் இடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

    English Summary

    Kerala Pooja Bumper Lottery 2026 Sales: Following the conclusion of the Onam Bumper lottery draw, sales for the Kerala Pooja Bumper lottery have commenced today. Priced at ₹300 per ticket, this lottery offers a first prize of ₹12 crore. Here, you can find full details regarding the prize structure and the date of the draw.