திருவனந்தபுரம்: கேரளா அரசின் திருவோணம் பம்பர் லாட்டரி குலுக்கல் முடிவுகள் வெளியாகி, மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த 2026-ஆம் ஆண்டு திருவோணம் பம்பர் வரலாற்றிலேயே மிக அதிகபட்சமாக, முதல் பரிசாக ₹30 கோடி அறிவிக்கப்பட்டது. இந்த மெகா ஜாக்பாட் அடித்த அதிர்ஷ்ட டிக்கெட் எண் TL 360615.
கண்ணூரைச் சேர்ந்த அனீஷ் எம்.வி (ஏஜென்சி எண்: C-3789) என்ற லாட்டரி ஏஜென்ட் விற்ற டிக்கெட்டுக்குத்தான் இந்த ₹30 கோடி விழுந்துள்ளது. ஆனால், குலுக்கல் முடிந்து பல மணி நேரங்கள் கடந்த பின்னரும், அந்த ₹30 கோடிக்கு அதிபதியான நபர் யார் என்பது இன்னும் மர்மமாகவே நீடிக்கிறது.
ஒரே இரவில் கோடீஸ்வரராக மாறியவர் ஏன் ஊரறிய முன்னால் வந்து மகிழ்ச்சியைக் கொண்டாடவில்லை? அவர் ஏன் தன் அடையாளத்தை ரகசியமாக வைத்துள்ளார்? இதன் பின்னணியில் பல நடைமுறைச் சிக்கல்களும் அதிர்ச்சிகரமான காரணங்களும் உள்ளன. ஒருவருக்குப் பல கோடி ரூபாய் பரிசு விழுந்துவிட்டது என்று தெரிந்தாலே, பல ஆண்டுகளாகப் பேசாத உறவினர்களும் தேடி வரத் தொடங்குவார்கள். வீட்டு வாசலில் நின்று உதவி கேட்பதும், குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரும் தங்கள் தேவைகளை முன்வைத்து அழுத்தம் கொடுப்பதும் வழக்கமாக நடக்கும் விஷயம். பணம் கிடைத்துவிட்டது என்பதற்காக அனைவருக்கும் கொடுத்துவிட முடியாது. ஆனால் யாருக்காவது பணம் தர மறுத்தால், "பணம் வந்ததும் திமிர் பிடித்துவிட்டது" என்ற பழிச்சொல்லும் பகையும் வந்து சேரும். இந்த மன உளைச்சலுக்கு பயந்தே வெற்றியாளர்கள் ஆரம்பத்தில் அமைதியாக இருக்க விரும்புகிறார்கள். பரிசு வென்றவரின் முகம் ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் வெளியாகிவிட்டால், அடுத்த நாளே அவரது வீட்டின் முன் கடன் கேட்பவர்களின் கூட்டம் அலைமோதும். வீடு கட்ட, தொழில் தொடங்க, மருத்துவச் செலவு எனப் பலதரப்பட்ட காரணங்களைச் சொல்லி உதவிகள் கோரப்படும். முன்பின் தெரியாதவர்கள்கூட வீட்டை முற்றுகையிடும் நிலை உருவாகும். கடந்த காலங்களில் கேரளா ஓணம் பம்பர் வென்ற சிலர், கூட்ட நெரிசலாலும் கடன் கேட்பவர்களின் தொல்லையாலும் சொந்த வீட்டைப் பூட்டிவிட்டு தப்பியோடிய நிகழ்வுகள் கூட நடந்துள்ளன. உடம்பு சரியில்லாத குழந்தையை மருத்துவமனைக்குக் கூட நிம்மதியாகக் கொண்டு செல்ல முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டதாக முந்தைய வெற்றியாளர்கள் கண்ணீர் மல்கக் கூறியதுண்டு. கோடிக்கணக்கான ரூபாய் ஒருவரிடம் இருக்கிறது என்பது அனைவருக்கும் தெரிந்தால், குடும்பத்தினரின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிறது. மிரட்டிப் பணம் பறிக்கும் கும்பல்கள், போலி முதலீட்டுத் திட்டங்களைச் சொல்லி ஏமாற்றும் ஏஜென்ட்டுகள் எனப் பல தரப்பிலிருந்தும் அச்சுறுத்தல்கள் வரலாம். திடீரெனக் கொட்டும் பண மழையால் வாழ்வின் அமைதியும் இயல்பான தூக்கமும் தொலைந்து போகக்கூடாது என்று நினைக்கும் வெற்றியாளர்கள், தங்கள் அடையாளத்தை மறைத்து ரகசியத்தைக் காப்பதையே பாதுகாப்பான முடிவாகக் கருதுகின்றனர். கேரள மாநில லாட்டரித் துறை இந்த ஆண்டு அச்சிட்ட மொத்த 90 லட்சம் டிக்கெட்டுகளும் முழுமையாக விற்றுத் தீர்ந்து புதிய சாதனை படைத்தன. ஒரு டிக்கெட்டின் விலை ₹500 ஆகும். செப்டம்பர் 26 அன்று திருவனந்தபுரத்தில் உள்ள கார்க்கி பவனில் நடைபெற்ற விழாவில் இந்த குலுக்கல் நடைபெற்றது. இந்த லாட்டரித் திட்டத்தின் கீழ் மொத்தப் பரிசுத் தொகையாக ₹125.56 கோடி வழங்கப்படுகிறது. முதல் பரிசு: ₹30 கோடி (டிக்கெட் எண்: TL 360615) ₹30 கோடி பரிசு கிடைத்தாலும், அந்த முழுத் தொகையும் வெற்றியாளரின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக வராது. முதலில், டிக்கெட்டை விற்ற ஏஜென்ட்டுக்குரிய கமிஷன் தொகை பிடித்தம் செய்யப்படும். அதன்பின் அரசு விதிகளின்படி 30 சதவீத வருமான வரி (TDS) பிடித்தம் செய்யப்படும். இத்துடன் வருமான வரி மீதான கூடுதல் வரி மற்றும் செஸ் ஆகியவையும் கழிக்கப்படும். அனைத்து வரிகளும் பிடித்தம் செய்யப்பட்ட பிறகு, சுமார் ₹15 முதல் ₹16 கோடி வரையிலான நிகரத் தொகையே வெற்றியாளரின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். வெற்றியாளர் நேரில் ஊடகங்கள் முன் வரவேண்டிய கட்டாயம் இல்லை. அவர் தனது அசல் லாட்டரி டிக்கெட் மற்றும் அடையாள ஆவணங்களுடன் ஏதேனும் ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் மூலமாகவோ அல்லது நேரடியாகத் தலைமை லாட்டரி இயக்குநரகத்திலோ சமர்ப்பிக்கலாம். அதிர்ஷ்டம் கதவைத் தட்டினாலும், அதன்பின் வரும் சிக்கல்களைத் தவிர்த்து அமைதியான வாழ்வை வாழ நினைப்பதே இப்போதைய வெற்றியாளர்களின் ரகசிய உத்தியாக உள்ளது.உறவினர்களின் எதிர்பார்ப்பும் பண நெருக்கடியும்
கடன் கேட்போர் மற்றும் முன்பின் தெரியாதவர்களின் தொல்லை
குடும்பத்தின் பாதுகாப்பு மற்றும் நிம்மதி
2026 திருவோணம் பம்பர் லாட்டரியின் முழு விவரங்கள்
இரண்டாம் பரிசு: 20 பேருக்கு தலா ₹1 கோடி
மூன்றாம் பரிசு: 20 பேருக்கு தலா ₹25 லட்சம்
நான்காம் பரிசு: 10 பேருக்கு தலா ₹5 லட்சம்
ஐந்தாம் பரிசு: 10 பேருக்கு தலா ₹2 லட்சம்
ஆறாம் பரிசு: 54,000 பேருக்கு தலா ₹5,000
ஏழாம் பரிசு: 81,000 பேருக்கு தலா ₹2,000
எட்டாம் பரிசு: 1,24,000 பேருக்கு தலா ₹1,000
ஒன்பதாம் பரிசு: 2,75,400 பேருக்கு தலா ₹500
ஆறுதல் பரிசு: 9 பேருக்கு தலா ₹5 லட்சம்வெற்றியாளரின் கைக்கு முழுப் பணமும் கிடைக்குமா?
வெற்றியாளர் பணத்தை எப்படிப் பெறுவார்?