நீங்க கரப்பான் பூச்சியா? சிங்கமா? சர்ச்சையை கிளப்பிய துணைவேந்தர்! மாணவர்களின் ரியாக்ஷனை பாருங்க

  • திருவனந்தபுரம்: சமீபத்தில் டெல்லி ஜந்தர் மந்தரில் நடந்த கரப்பான் ஜனதா போராட்டம் (CJP) மத்திய அரசை ஒரு வழி ஆக்கியிருந்தது. இப்படி இருக்கையில், கேரளாவில் மாணவர்கள் மத்தியில், நீங்கள் கரப்பான் பூச்சிகளா? சிங்கங்களா? என்று துணைவேந்தர் ஒருவர் பேசியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

    Advertisement

    போட்டி தேர்வுகளில் சிறந்து விளங்கிய மாணவர்களை கௌரவிப்பதற்காக, ஆக.18ம் தேதியன்று திருவனந்தபுரம் கழக்கூட்டத்தில் 'விஜயதாரகம்' எனும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் துணைவேந்தர் மோகனன் குன்னும்மல் பங்கேற்றிருந்தார்.

    Advertisement

    நிகழ்ச்சியில் பங்கேற்றோமா.. நல்லதா நாலு வார்த்தை பேசினோமா! என்று இல்லாமல்.. கரப்பான் பூச்சிகளை பற்றி பேசிய சர்ச்சையில் சிக்கியிருக்கிறார் இவர். மாணவர்களை பார்த்து.. "உங்களை போன்ற மாணவர்களை சிலர் என்னனு சொல்றாங்க தெரியுமா? கரப்பான் பூச்சிகளாம்.. நீங்க சொல்லுங்க! கரப்பான் பூச்சிகளா நீங்க?" என்று கேட்டார். மாணவர்கள் கோரசாக.. இல்லைனு சொல்லுவாங்க என மோகனன் எதிர்பார்த்திருந்தார். ஆனால், நடந்தது வேறு.

    மாணவர்கள் எந்த பதிலும் சொல்லவில்லை. அமைதியாக இருந்தார்கள். எனவே மீண்டும், "நீங்கள் கரப்பான் பூச்சிகள் இல்லையெனில் நீங்கள் யார்? நீங்கள் சிங்கங்கள். அப்படித்தானே!" என்று அவரே பாயிண்ட்டை எடுத்துக்கொடுத்தார். அப்போதுமானவர்கள் பதில் சொல்லாமல் சைலண்ட்டாக இருந்தனர்.

    Advertisement

    இப்படியே விட்டால் சரிபட்டு வராது என்று யோசித்த மோகனன், தொடர்ந்து பேசினார். "உங்களுக்கு சந்தேகம் இருக்கிறதா? தாங்கள் கரப்பான் பூச்சிகள் இல்லை என்று நினைப்பவர்கள் சத்தமாகவும், உறுதியாகவும் சொல்லுங்கள்" என்று மீண்டும், மீண்டும் வற்புறுத்தி கேட்க ஒன்று ரெண்டு மாணவர்கள் மட்டும்.. இல்லை என்று பதில் கூறினர். அப்பாடா ஒரு வழியா நாம நினைச்சத சொல்ல வச்சுட்டோம் என்று பெருமையுடன் தொடர்ந்து பேசிய மோகனன், "மாணவர்கள் கரப்பான் பூச்சிகளாக இருக்கக்கூடாது. சிங்கங்களாகவும், துர்கை அம்மனின் வடிவமாகவும் மாற வேண்டும்" என்று கூறியிருந்தார்.

    துணைவேந்தரின் பேச்சு எங்கு சர்ச்சையை ஏற்படுத்திவிடப்போகிறதோ! என்று பயந்த கேரள ஆளுநர் விஸ்வநாத் அர்லேக்கர், ஏதேதோ பேசி மழுப்பினார். ஆனால் மோகனன் பேசியது சோஷியல் மீடியாக்களில் பரவலாக ஷேராகி விமர்சனங்களை ஏற்படுத்தியிருக்கிறது.

    Advertisement

    மோகனன் இதுபோன்று ஏடாகுடமாக பேசி பஞ்சாயத்தில் சிக்குபவர்தான். இதற்கு முன்னர் RSS நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றிருந்த அவர், "வந்தே மாதரம் பாடலை எதிர்ப்பவர்களுக்கு தங்கள் தாய் யாரென்றே தெரியாது" என்று கூறியிருந்தார். தற்போது கரப்பான் பூச்சிகள் பற்றி பேசி மொக்கை வாங்கியிருக்கிறார்.

    English Summary

    Cockroaches: The recent 'cockroach janata party' protest (CJP) at Delhi's Jantar Mantar had put the Central Government in a tight spot. Against this backdrop, a Vice-Chancellor in Kerala has stirred up a controversy by asking students, "Are you cockroaches or lions?"