திருவனந்தபுரம்: விஜய்தான் அடுத்த பிரதமர் என்று தவெக அமைச்சர்கள் கூறி வரும் நிலையில், கேரளாவில் நடிகர் தேவனை களம் இறக்கி தவெகவை வலுப்படுத்த முதலமைச்சர் விஜய் யோசித்திருக்கிறார். இதனால் கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கடும் அதிர்ச்சியடைந்திருக்கிறது.
தமிழ்நாடு, புதுச்சேரியில் தவெகவுக்கு எம்எல்ஏக்கள் இருக்கின்றனர். இந்த செல்வாக்கை தென் மாநிலங்கள் முழுவதுக்கும் விரிவுபடுத்த விஜய் யோசித்து வருகிறார். குறிப்பாக கேரளாவில் கால் பதிப்பதே அவரது முதல் விருப்பம்.
நம்மூரை போல கிடையாது கேரளா. அம்மாநில மக்களுக்கு சினிமாவையும், அரசியலையும் பிரித்து பார்க்க தெரியும். சினிமாவின் உட்ச நட்சத்திரம் என்பதற்காக அரசியலில் அவ்வளவு சீக்கிரம் வாய்ப்பு கொடுத்துவிட மாட்டார்கள். இருப்பினும் விஜய் மீது கேரள மக்களுக்கு தனி ஈர்ப்பு இருக்கிறது. இந்த ஈர்ப்பை அரசியல் செல்வாக்காக மாற்ற முடியுமா? என்று தவெக பிளான் செய்து வருகிறது. இந்த பிளானை சரியாக எக்ஸிகியூட் செய்ய தேர்ந்தெடுக்கப்பட்டவர்தான் நடிகர் தேவன். ரஜினியுடன் பாட்சா உள்ளிட்ட படங்களில் இவர் நடித்திருக்கிறார். பாஜகவின் கேரள மாநில துணைத்தலைவராக இருந்த அவர், சமீபத்தில் இந்த பொறுப்பிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டிருக்கிறார். செப்.8ம் தேதி.. அதாவது தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் முடிந்த பின்னர், நடிகர் தேவன் சென்னை பனையூர் வந்து.. விஜய்யை சந்தித்து முறைப்படி கேரள மாநில தவெக தலைவராக பொறுப்பேற்றுக்கொள்ள இருக்கிறார். பிளானை பார்க்கும்போது.. எல்லாம் ஓகேதான். ஆனால், கூட்டணியில் உள்ள காங்கிரஸ்தான் விஜய்யின் இந்த நடவடிக்கையால் டென்ஷன் ஆகியிருக்கிறது. தவெகவுக்கு ஆதரவளிக்க காங்கிரஸ் சில காரணங்களை வைத்திருந்தது. முதல் காரணம் அமைச்சரவையில் இடம். இரண்டாவது காரணம்.. கேரளா உள்ளிட்ட தென் மாநிலங்களில் விஜய்க்கு இருக்கும் செல்வாக்கை முழுமையாக பயன்படுத்திக்கொள்வது. ஆனால், நடக்கும் விஷயங்களை பார்க்கும்போது.. விஜய்யை காங்கிரஸ் பயன்படுத்திக்கொள்வதை போல தெரியவில்லை.. காங்கிரஸைதான் விஜய் பயன்படுத்திக்கொள்வதை போல தெரிகிறது. கேரளாவில் கட்சியை வளர்க்க தவெக காட்டி வரும் ஆர்வம்.. விஜய்தான் பிரதமர் வேட்பாளர் என்பதை உறுதி செய்யும் விதமாக இருப்பதாக அம்மாநிலத்தில் ஆட்சியில் இருக்கும் காங்கிரஸை டென்ஷன் ஆக்கியிருக்கிறது. இதற்கிடையில், நடிகர் தேவன் தவெக தலைவராவது குறித்து பேசுகையில், "கடந்த 5 ஆண்டுகளாக பாஜகவில் இருந்தேன். எதுக்கு இருந்தேன் என எனக்கும் தெரியவில்லை.. அவர்களுக்கும் தெரியவில்லை! சும்மாவேதான் இருந்தேன். ஒரு கட்டத்தில்.. பாஜகவில் இருப்பது நல்லதல்ல என்று விலகினேன். பின்னர் காங்கிரஸிலிருந்து கால் வந்தது. எனக்கு விருப்பம் இல்லை. மறுபுறம் ஆக.16ம் தேதி தவெகவிலிருந்து அழைப்பு வந்தது. கேரள மாநில தவெக தலைவராக என்னை பொறுப்பேற்க சொல்லி கேட்டார்கள். மக்கள் நலன் மீதான எண்ணம், அர்ப்பணிப்பு எல்லாம் எனக்கும் விஜய்க்கும் ஒன்றாகத்தான் இருக்கிறது. அவருடன் 6 படங்களில் சேர்ந்து நடித்திருக்கிறேன். தனிப்பட்ட முறையில் எனக்கும் அவருக்கும் இடையேயான நட்பு உள்ளது. கேரளாவில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட்டுகள், பாஜக மீதான அதிருப்தி காரணமாக தவெகவை புதிய மாற்றமாக இளைஞர்கள் பார்க்கிறார்கள். இங்கு தவெகவுக்கு நல்ல வாய்ப்பு உள்ளது" என்று கூறியிருக்கிறார்.கேரள அரசியல்
கேரள தவெக தலைவர்
காங்கிரஸ் டென்ஷன்
விஜய் vs காங்கிரஸ்
தேவன் பேட்டி
மாற்று சக்தி