காதலிக்க முடியாது.. தைரியமாக மறுத்த இளம் பெண்.. கழுத்தையே குறி வைத்த கொடூர காதலன்

  • திருவனந்தபுரம்: ஒரு தலைக்காதலின் போது, காதலிக்கு தன்னை பிடிக்கவில்லை என்றால், விலகி செல்ல வேண்டும். ஆனால் தனக்கு கிடைக்காத பெண், வேறு யாருக்கும் கிடைக்கவே கூடாது என்று மோசமான எண்ணத்தில் இளைஞர்கள் சிலர் வாழ்கிறார்கள். அவர்கள் கொலை செய்யவும் தயங்குவது இல்லை.. தன் எதிர்காலத்துடன், அந்த பெண் மற்றும் அப்பெண்ணின் குடும்பத்தினர் எதிர்காலத்தையும் அழிக்கும் கொடூர மனம் படைத்தவர்களாகி விடுகிறார்கள். அப்படி ஒரு சம்பவம் கொல்லம் மாவட்டத்தில் நடந்துள்ளது.

    Advertisement

    கேரளம் மாநிலம் கொல்லம் மாவட்டம் குளத்துப்புழா பகுதியைச் சேர்ந்த 20 வயதாகும் தின்ஷா என்பவர் பத்தனம் திட்டா மாவட்டம் கோழஞ்சேரி அருகே மாராமண் என்ற இடத்திலுள்ள ஒரு ரிசார்ட்டில் வரவேற்பாளராக வேலை செய்து வந்தார். இவரை கோழஞ்சேரி பகுதியை சேர்ந்த 27 வயதாகும் ஜித்து என்ற இளைஞர் ஒரு தலையாக காதலித்துள்ளார்.

    Advertisement

    ஒரு கட்டத்தில் தனது காதலை அவர் வெளிப்படுத்திய பிறகும் தின்ஷா, அதனை பொருட்படுத்தவில்லை . அதன்பிறகும் ஜித்து, தின்ஷாவின் பின்னடியே சுற்றி வந்து காதலிக்க வேண்டும் என்று வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால் தின்ஷா கண்டுகொள்ளவே இல்லை. இதனால் கோபம் அடைந்த ஜித்துவின் மனநிலையில் மாற்றம் ஏற்பட்டது. 'எனக்கு கிடைக்காத நீ யாருக்கும் கிடைக்கக்கூடாது' என்று ஜித்து ஆத்திரம் அடைந்துள்ளார். காதலை ஏற்றுக் கொள்ளவில்லையென்றால் தின்ஷாவை கொல்ல வேண்டும் என கொடூர எண்ணத்தில் சுற்றி வந்துள்ளார்.

    அதற்காக கத்தியை வாங்கி கொண்ட ஜித்து, உடலில் மறைத்து வைத்துக் கொண்டார். பின்னர் தின்ஷா வேலை பார்த்த ரிசார்ட்டுக்கு சென்றுள்ளார். அங்கு தின்ஷாவிடம் சென்று, முக்கியமான விஷயம் பேச வேண்டும், இனி தொந்தரவு செய்ய மாட்டேன். எனவே வெளியே வரும்படி அவர் அழைத்துள்ளார்.

    Advertisement

    இதனை நம்பி சென்ற தின்ஷாவிடம், தன்னை காதலிக்க வேண்டும் என ஜித்து கெஞ்சியுள்ளார். ஆனால் தின்ஷா திட்டி அனுப்பி வைக்க முயன்றுள்ளார். . இதில் ஆத்திரமடைந்த ஜித்து, கழுத்தை குறி வைத்து சரமாரியாக குத்தினார். இந்த கொடூர தாக்குதலில் நிலைகுலைந்த தின்ஷா, ரத்த வெள்ளத்தில் அதே இடத்திலேயே சுருண்டு பரிதாபமாக உயிரிழந்தார்.

    இந்த கொலையை நேரில் பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்களில் சிலர் ஜித்துவை மடக்கி பிடித்து கயிறால் கைகளையும், கால்களையும் கட்டிப்போட்டனர். இதற்கிடையே கோழஞ்சேரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தின்ஷாவின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும் ஜித்துவை பிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். பின்னர் இந்த பயங்கர கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து ஜித்துவை கைது செய்தனர். காதலிக்க மறுத்ததால் இளம்பெண்ணை சரமாரியாக வாலிபர் குத்திக் கொன்ற சம்பவம் கேரளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    English Summary

    What happened to 20-year-old Dinsha from the Kulathupuzha area of ​​Kollam district, Kerala, at the hands of an obsessed lover?