நீட் போராட்டக்காரர்களை சுட்டு கொன்றிருப்பேன்.. ஆர்எஸ்எஸ்காரர் ஆதங்கம்! என்ன சொன்னாருனு பாருங்க!

  • திருவனந்தபுரம்: நீட் வினாத்தாள் லீக் விவகாரத்திற்கு நீதி கேட்டு மாணவர்கள் டெல்லியிலும், நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இப்படி இருக்கையில், நான் அதிகாரத்தில் இருந்து இருந்தால் போரடியவர்களை சுட்டு கொன்றிருப்பேன் என்று ஆர்எஸ்எஸ் அமைப்பின் நிர்வாகி ஒருவர் பேசியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

    Advertisement

    கேரளாவை சேர்ந்த ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவின் அறிவுசார் பிரிவின் முன்னாள் தலைவருமான டி.ஜி.மோகன்தாஸ், பத்ரிகா எனும் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, "நான் அந்த பகுதியில் அதிகாரத்தில் இருந்து இருந்தால் முதலில் ஊரடங்கு உத்தரவு போட்டிருப்பேன். கலைந்து செல்லுங்கள் என்று கூட்டத்தை பார்த்து 3 முறை எச்சரிக்கை விட்டிருப்பேன்.

    Advertisement

    சர்ச்சை கருத்து

    அதன் பின்னரும் கலைந்து செல்லவில்லை எனில், துப்பாக்கிச்சூடு நடத்தியிருப்பேன். இப்படி செய்வதால் மக்கள் சிதறி ஓடுவார்கள். சிலர் இறக்கலாம்.. சிலர் காயமடையலாம். ஆனால் 4 மணி நேரத்தில் நிலைமை கட்டுக்குள் வந்திருக்கும். பின்னர் உடல்களை சேகரித்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருப்பேன். இதுமட்டுமல்ல.. போலீசார் அங்கிருந்து விலகியிருந்தால்.. அங்கு பாலியல் வன்கொடுமைகள் நடக்கும். இடதுசாரிகள், மதச்சார்பற்றவர்கள் மற்றும் ஜனநாயகவாதிகளில் சில பெண்களுக்கு.. பாலியல் வன்கொடுமை செய்யப்படுவது பிடிக்கும். அப்படி நடந்தாலும் அவர்கள் புகார் அளிக்க மாட்டார்கள்" என்று கூறியிருக்கிறார்.

    இவரது கருத்துக்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்துத்துவா அமைப்புகளின் உண்மை முகம் இதுதான் என்றும் விமர்சித்திருக்கின்றனர்.

    Advertisement

    நீட் போராட்டம்

    நீட் தேர்வு என்பதே பெரிய மோசடி.. அதில் வினாத்தாள் கசிவு என்பதை எல்லாம் ஏற்றுக்கொள்ளவே முடியாது என்று மாணவர்கள் கொந்தளித்திருந்தனர். இதுவரை 152 முறை நீட் வினாத்தாள் லீக் ஆகியிருந்ததாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் கூறியிருந்தார்.

    எனவே இந்த குளறுபடிகளுக்கு பொறுப்பேற்று.. மத்திய கல்வி அமைச்சராக இருந்த தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்று டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான் ஜனதா கட்சியின் சார்பில் போராட்டம் தொடங்கியது.

    மாணவர்கள் மீது தடியடி

    கடந்த 20ம் தேதியன்று, போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்களும், இளைஞர்களும் நாடாளுமன்றம் நோக்கி பேரணி நடத்தியிருந்தனர். மாணவர்களை தடுக்க தடியடி, கண்ணீர் புகை குண்டுகள், பெல்லட் குண்டுகள், மின் அதிர்வு தடியடியை டெல்லி போலீசார் பயன்படுத்தியிருந்தனர்.

    Advertisement

    வெற்றி பெற்ற போராட்டம்

    இதில் ஏராளமான மாணவர்கள் காயமடைந்தனர். இதை தொடர்ந்து, டெல்லியில் போராடும் மாணவர்களுக்கு ஆதரவாக தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, பீகார், மேற்கு வங்கம், அசாம் என பல்வேறு பகுதிகளிலும் போராட்டம் வெடித்தது. எனவே வேறு வழியின்றி தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தார்.

    இந்நிலையில், இந்த போராட்டம் குறித்து கேரளாவின் இந்துத்துவா அமைப்பை சேர்ந்த நிர்வாகி ஒருவர் சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருப்பது விவாதங்களை ஏற்படுத்தியிருக்கிறது.

    English Summary

    NEET Protesters: Students across Delhi and various states had been protesting to demand justice regarding the NEET question paper leak issue. Amidst this, a statement by an RSS functionary—claiming that had he been in power, he would have shot the protesters dead—has sparked a controversy.