ஞானேஷ் குமாருக்கு புதிய சிக்கல்.. 20 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஊழல் வழக்கை கையில் எடுத்த கேரள அரசு

  • திருவனந்தபுரம்: கடந்த 2006 ஆம் ஆண்டு கேரளாவில் பொதுப்பணித்துறை செயலாளராக ஞானேஷ் குமார் பதவி வகித்த போது, நெடுஞ்சாலை பணிகளுக்கு பணத்தை விடுவிக்க லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்தது. இந்த வழக்கை தற்போது கையில் எடுத்துள்ள காங்கிரஸ் ஞானேஷ் குமார் மீது புகார் அளித்துள்ளது. இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்துமாறு லஞ்ச ஒழிப்புத்துறைக்கு கேரள உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதாலா உத்தரவிட்டுள்ளார். இது ஞானேஷ் குமாருக்கு புதிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

    Advertisement

    தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், எஸ்.ஐ.ஆர் விவகாரத்தில் தன்னிச்சையாக செயல்பட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது. சக தேர்தல் ஆணையர்களின் எதிர்ப்பையும் மீறி அவர் பல முடிவுகள் எடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்து வரும் நிலையில், ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கியுள்ளன.

    Advertisement

    ஞானேஷ் குமார் லஞ்சம் பெற்றதாக புகார்

    ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி கரப்பான் பூச்சி ஜனதா கட்சியும் போராட்டத்தை அறிவித்துள்ளது. இதனால் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள ஞானேஷ் குமாருக்கு இன்னொரு சிக்கல் வெடித்துள்ளது. கேரள பிரிவை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரியான ஞானேஷ் குமார், மத்திய அரசு பணிக்கு செல்வதற்கு முன்பாக கேரளாவில் பல்வேறு துறைகளில் பணியாற்றி இருந்தார்.

    அந்த வகையில் கடந்த 2006 ஆம் ஆண்டு பொதுப்பணித்துறை செயலாளராக கேரள அரசில் பதவி வகித்தார். அப்போது நெடுஞ்சாலை பணிகளுக்கு பணத்தை விடுவிக்க லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்தது. இந்த வழக்கை தற்போது கையில் எடுத்துள்ளது காங்கிரஸ். இந்த முறைகேடு புகார் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் வேணுகோபால் நேற்று முன் தினம் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்துமாறு லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதாலா உத்தரவிட்டுள்ளார்.

    Advertisement

    குற்றச்சாட்டு என்ன?

    இத்குறித்து கேரள உள்துறை அமைச்ர ரமேஷ் சென்னிதாலா கூறுகையில், "கடந்த 2006 ஆம் ஆண்டு கேரளாவின் அங்கமாலி முதல் திருவனந்தபுரம் வரையிலான எம்.சி. சாலை மறுகட்டமைப்பு பணிகள் செய்யப்பட்டது. உலக வங்கி நிதி உதவியுடன் ரூ.215 கோடியில் நடந்த இந்த பணிகளை ஒரு மலேசிய நிறுவனம் செய்தது. அந்த நிறுவனத்தின் திட்ட என்ஜினியராக இருந்த லீ சீ பீன், சாலைப்பணியின் போது பல்வேறு புகார்களை எழுப்பியிருந்தார்.

    பின்னர் மலேசியா திரும்பிய அவர் அங்கேயே தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதியிருந்த தற்கொலைக் குறிப்பில், அப்போது செயலராக இருந்த ஞானேஷ் குமாரை வெளிப்படையாக குறிப்பிட்டு இருந்தார். எனினும், இந்த வழக்கின் விசாரணை அப்போது பெரிதாக நடைபெறவில்லை. அச்சுதானந்தன் தலைமையிலான அரசு அமைந்த பிறகு, விசாரணை முடங்கியது. செய்து முடித்த பணிகளுக்கு பணத்தை விடுவிப்பதற்கு லஞ்சம் கேட்டது, பணத்தை தாமதமாக வழங்கியது போன்றவை ஊழலுடன் தொடர்புடையதாக கூறப்படுகிறது.

    Advertisement

    ஞானேஷ் குமாருக்கு புதிய சிக்கல்

    எனவே புகாரில் உள்ள அனைத்து அம்சங்களையும் விசாரிக்கவும், அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இந்த வழக்கில் விசாரணை அவசியம் என்று நான் நினைக்கிறேன்" என்று கூறியுள்ளார். தலைமை தேர்தல் ஆணையருக்கு எதிரான இந்த வழக்கை 20 ஆண்டுகளுக்கு பிறகு கேரளா கையில் எடுத்து இருக்கும் நிலையில், ஞானேஷ் குமாருக்கு புதிய சிக்கல் எழுந்துள்ளது.

    English Summary

    Gnanesh Kumar: Allegations arose that Gnanesh Kumar accepted a bribe to release funds for highway projects while serving as the Public Works Department Secretary in Kerala in 2006. The Congress party has now taken up this matter and lodged a formal complaint against him. Kerala Home Minister Ramesh Chennithala has ordered the Anti-Corruption Bureau to conduct an inquiry based on this complaint, creating fresh trouble for Gnanesh Kumar.