இன்ஸ்டா பிரபலம் அகில் மனைவி மேகா.. டிரைவருடன் ஓட்டம்.. குலுங்கிய சோஷியல் மீடியா.. அதிர்ச்சி பின்னணி!

  • திருவனந்தபுரம்: கேரளா சமூக வலைத்தளங்களில் லட்சக்கணக்கான ரசிகர்களைக் கொண்டு, மிகவும் பிரபலமான வோல்கர் மற்றும் இன்ஃப்ளூயன்ஸர் ஜோடியாக வலம் வந்தவர்கள் அகில் மற்றும் மேகா. ஒரே தெருவில் வசித்து, காதலித்து திருமணம் செய்து கொண்ட இந்த இளம் ஜோடி, இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூபில் தங்களது மகிழ்ச்சியான வாழ்க்கை தருணங்களை பகிர்ந்து ரசிகர்களின் ட்ரீம் கப்ள் ஆக திகழ்ந்தனர்.

    Advertisement

    ஆனால், திரைக்கு பின்னால் இருந்த அவர்களின் நிஜ வாழ்க்கை முற்றிலும் வேறுபட்டதாக இருந்தது தற்போது வெளிச்சத்திற்கு வந்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    Advertisement

    என்ன நடந்தது?

    கடந்த சில நாட்களாக அகிலின் மனைவி மேகாவைக் காணவில்லை என்று காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருந்தது. காவல்துறை நடத்திய தீவிர விசாரணையிலும், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோதும் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின. மேகா தனது வீட்டில் இருந்த பணப் பெட்டி மற்றும் விலைமதிப்பற்ற நகைகள் உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் எடுத்துக்கொண்டு, ஒரு உள்ளூர் பஸ் டிரைவருடன் நள்ளிரவில் வீட்டை விட்டு வெளியேறியது உறுதியானது.

    சட்டப்பூர்வமாக விவாகரத்து பெறாமல், கணவனுக்கு தெரியாமல் தனது புதிய வாழ்க்கையைத் தொடங்குவதற்காக மேகா இவ்வாறு செய்துள்ளது கேரள சமூக வலைத்தளங்களில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.

    Advertisement

    யார் இந்த அகில்?

    அகில் இன்ஸ்டாகிராம் மூலம் பிரபலம் ஆனவர். இவர் சில மலையாள படங்களில் நடித்துள்ளார். இன்ஸ்டாகிராமில் பிரபலம் ஆனதன் மூலம் இவர் அங்கே டிரெண்டிங்கில் இருந்தார். இதன் மூலம் அவர் மனைவியும் கவனிக்கப்பட்டார். இவருக்கு மாதம் வருமானம் மட்டும் 10 லட்சம் ரூபாய் வரை வந்ததாக கூறப்படுகிறது.

    இப்படி இருக்க மேகா உள்ளூர் பஸ் டிரைவர் உடன் சென்றுள்ளார். அவருக்கு இப்போதுதான் அரசுப்பணி கிடைத்தாக கூறப்படுகிறது. அந்த டிரைவருக்கு ஏற்கனவே பல பெண்களுடன் தொடர்பு இருப்பதாக புகார் உள்ளது. இது தொடர்பாக மேகா வெளியிட்டு டெலிட் செய்த வீடியோவில் அகில் பல பெண்களுடன் இருந்ததே ஓடிப்போக காரணம் என்று கூறி உள்ளார். அனால் சட்டப்பூர்வமாக விவாகரத்து பெறாமல், கணவனுக்கு தெரியாமல் தனது புதிய வாழ்க்கையைத் தொடங்குவதற்காக மேகா இவ்வாறு செய்துள்ளது கேரள சமூக வலைத்தளங்களில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.

    Advertisement

    அமைதி காக்கும் அகில்:

    இந்த சம்பவம் குறித்து அகில் வெளியிட்ட வீடியோக்களும் தகவல்களும் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன. தனது மனைவியின் இந்த செயலால் கடும் அதிர்ச்சியடைந்தபோதிலும், அகில் மிகவும் அமைதியாகவும் கண்ணியமாகவும் இதைக் கடக்க முயல்கிறார். நடந்தது நடந்துவிட்டது, போனவர்கள் போகட்டும் என்று தனது நண்பர்களிடம் கூறிய அகில், அவளைப் பற்றி யாரும் தவறாகப் பேச வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

    டிரெண்டாகும் புதிய சர்ச்சை:

    கேரளாவில் சமீபகாலமாக திருமணமான பெண்கள், உள்ளூர் பஸ் டிரைவர்கள் மற்றும் பிறருடன் குடும்பத்தை விட்டு ஓடிப்போகும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக நெட்டிசன்கள் இணையத்தில் காரசாரமாக விவாதித்து வருகின்றனர்.

    Advertisement

    சமூக வலைத்தளங்களில் காட்டப்படும் ரீல்ஸ் வாழ்க்கைக்கும், நிஜ வாழ்க்கைக்கும் இடையே உள்ள பெரிய வித்தியாசத்தை இந்த அகில்-மேகா சம்பவம் வெளிச்சம்போட்டு காட்டியுள்ளதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    English Summary

    Popular Kerala Vlogger Akhil NRD’s Wife Megha Elopes With Local Bus Driver