Bumper Lottery: ஓணம் பம்பர் லாட்டரி 30 கோடி பரிசு.. தமிழருக்கு அடித்ததா யோகம்? விற்பனை செய்த ஏஜெண்ட் சொல்வது என்ன?

  • திருவனந்தபுரம்: கேரளா ஓணம் பம்பர் லாட்டரியில், ரூ.30 கோடியை அள்ளிய அதிர்ஷ்டசாலி யார்? என்பது இன்னும் தெரியவில்லை. கன்னூரில் பேருந்து நிலையத்தின் அருகே உள்ள கடையில் இந்த டிக்கெட் விற்பனை ஆகியிருப்பதால், வெளி மாநில லாட்டரி பிரியர்கள் யாருக்கேனும் அடித்து இருக்க வாய்ப்பு இருக்கலாம் எனவும், குறிப்பாக பக்கத்து மாநிலமான தமிழகத்தில் இருந்து வந்த யாருக்கும் பரிசு அடித்து இருக்குமோ என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

    Advertisement

    கேரள ஓணம் பம்பர் லாட்டரி டிக்கெட்டின் குலுக்கல் இன்று பிற்பகல் 2 மணிக்கு திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. முதல் பரிசாக ரூ.30 கோடி TL 360615 என்ற எண்ணுக்கு அடித்துள்ளது. முதல் பரிசு விழுந்த டிக்கெட் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள சக்கரக்கல் என்ற டவுனில் இருக்கும் முத்து லாட்டரி ஏஜென்சியில் விற்பனை செய்யப்பட்ட டிக்கெட் ஆகும்.

    Advertisement

    பம்பர் அதிர்ஷ்டசாலி யார்?

    அனிஷ் என்ற லாட்டரி ஏஜெண்ட் இதனை விற்பனை செய்துள்ளார். இவரிடம் இருந்து வாங்கப்பட்ட டிக்கெட் கேரளாவின் தலிபரம்பு பேருந்து நிலையத்தில் உள்ள ஒரு கடையில் வைத்து விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்த டிக்கெட்டை இன்னொரு சிறிய வியாபாரி வாங்கி சென்றதாக கூறப்படுகிறது. தற்போது வரை 30 கோடியை வென்ற அதிர்ஷ்டசாலி யார் என்பது தெரியாததால், கேரள லாட்டரி பிரியர்கள் ஆர்வத்துடன் வெற்றியாளரை எதிர்பார்த்துக்கொண்டு இருக்கின்றனர்.

    கேரள ஓணம் பம்பர் ரூ.30 கோடி முதல் பரிசுதான்.. ஆனால் ஜெயிச்சால் எவ்வளவு கையில் கிடைக்கும் தெரியுமா?
    Advertisement

    ஓணம் பம்பரில் முதல் பரிசு அடித்த லாட்டரியை விற்பனை செய்த கடை முன்பாக கேரள மக்கள் திரண்டு தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகிறார்கள். 30 கோடியை அள்ளிய அதிர்ஷ்டசாலி யார்? என்பது இன்னும் தெரியவில்லை. பேருந்து நிலையத்தின் அருகே விற்பனை ஆகியிருப்பதால், வெளி மாநில லாட்டரி பிரியர்கள் யாருக்கேனும் அடித்து இருக்க வாய்ப்பு இருக்கலாம் என்றும் கேரள மக்கள் மத்தியில் ஒரு எதிர்பார்ப்பு நிலவுகிறது.

    தமிழருக்கு அடித்ததா முதல் பரிசு?

    குறிப்பாக தமிழர்களில் யாருக்கேனும் அடித்து இருக்குமோ எனவும் எதிர்ப்பார்க்கப்படுகிறது. பக்கத்து மாநிலம் என்பதால் வியாபாரம், சுற்றுலா என தமிழகத்தை சேர்ந்தவர்கள் கேரளாவுக்கு செல்வதால் அவர்களில் யாருக்கும் அடித்து இருக்கலாம் எனவும் சொல்லப்படுகிறது. எனினும், விற்பனை செய்த ஏஜென்சியை சேர்ந்த அனிஷ் கூறுகையில், கேரளத்தை சேர்ந்தவர்களுக்கே பரிசு கிடைத்து இருக்க அதிக வாய்ப்பு உள்ளது' என்றார்.

    Advertisement
    Onam Bumper lottery: கேரளா ஓணம் பம்பர்.. ரூ.30 கோடி பரிசு அடித்த நம்பர் இதுதான்.. எந்த ஊரில் வாங்கிய டிக்கெட் தெரியுமா?

    இதற்கு முன்பாக ஓணம் பம்பர் உள்பட பல பம்பர் பரிசுகள் தமிழ்நாடு, கர்நாடகாவை சேர்ந்த லாட்டரி பிரியர்களுக்கு விழுந்து இருப்பதால் இந்த முறையும் தமிழ்நாடு உள்பட வெளி மாநிலத்தவருக்கு விழுந்தாலும் வியப்பதற்கு இல்லை என்றே தெரிகிறது. இன்றோ நாளையோ லாட்டரியில் பரிசு அடித்த அதிர்ஷ்டசாலி யார் என்பது தெரிந்துவிடும்.

    அடித்த கடைக்கே மீண்டும் பரிசு

    ஓணம் பம்பரில் முதல் பரிசு வென்ற முத்து ஏஜென்சியில் விற்ற டிக்கெட்டுக்குதான் கடந்த ஆண்டு கிறிஸ்துமஸ் நியூ இயர் பம்பர் பரிசும் விழுந்ததாம். ஓணம் பம்பரில் முதல் பரிசு வென்ற டிக்கெட்டை விற்று இருக்கும் ஏஜென்சிக்கு கமிஷனாக ரூ.3 கோடி அளிக்கப்படும்.

    Advertisement
    Kerala: கேரள ஓணம் பம்பர் லாட்டரி குலுக்கல்! முதல் பரிசு 30 கோடி முதல் 9-வது பரிசு 500 வரை.. பரிசு அடித்த எண்கள் இது தான்

    கேரள லாட்டரி வரலாற்றில் அதிக விற்பனை செய்யபப்ட்ட பம்பர் லாட்டரியாக 2026 ஓணம் பம்பர் லாட்டரி மாறியுள்ளது. மொத்தம் 90 லட்சம் டிக்கெட்டுகள் அச்சடிக்கப்பட்ட நிலையில், அனைத்து விற்று தீர்ந்துள்ளன. அதிகபட்சமாக பாலக்காடு மாவட்டத்தில் 20,95,300 டிக்கெட்டுகளும், திரிசூரில் 10,62,000 டிக்க்கெட்டுகளும் ,திருவனந்தபுரத்தில் 8,64,100- டிக்கெட்டுகளும் விற்பனையாகியுள்ளன. முதல் பரிசு வென்ற அதிர்ஷ்டசாலிக்கு 30 கோடியில் 40 சதவீதம் அளவுக்கு வரியாகவே பிடித்தம் செய்யப்படும். சுமார் ரூ.15.5 கோடி மட்டுமே வெற்றியாளருக்கு வங்கி கணக்கில் வந்து சேரும்.

    English Summary

    Kerala Lottery: The identity of the ₹30 crore Onam Bumper lottery winner is still unknown. The winning ticket was sold at a shop near a bus stand in Kannur, raising speculation that it could belong to an out-of-state lottery buyer, possibly from neighbouring Tamil Nadu.