கேரள ஓணம் பம்பர்.. முதல் பரிசு இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரிப்பு! இவ்வளவு கோடியா? சேல்ஸ் எப்போது?

  • திருவனந்தபுரம்: கேரள ஓணம் பம்பர் (Thiruvonam Bumper Lottery) முதல் பரிசுத் தொகை இதுவரை 25 கோடி என்று இருந்த நிலையில், வரும் பம்பரில் இருந்து முதல் பரிசு ரூ.30 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கேரளா லாட்டரி வரலாற்றில் ஒரு டிக்கெட்டுக்கு இவ்வளவு பெரிய தொகை கொடுப்பது இதுவே முதல் முறையாகும். இந்த டிக்கெட்டிற்கான சேல்ஸ் வரும் திங்கட்கிழமை தொடங்க உள்ளது.

    Advertisement

    இந்த நிலையில் நேற்று கேரள முதல்வர் விடி சதீசன், ஓணம் பம்பர் டிக்கெட்டிற்கான பரிசுத்தொகையை அறிமுகம் செய்தார். முதல் பரிசு ரூ.30 கோடி ஆகும். கமிஷன் எல்லாம் பிடித்தது போக மீதம் கைக்கு, ரூ.18 கோடிக்கு மேல் கிடைக்கும் என்பதால் கேரளா லாட்டரி பிரியர்கள் மத்தியில் இந்த டிக்கெட்டுக்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    Advertisement

    கேரள திருவோணம் பம்பர் லாட்டரி

    கேரள லாட்டரிகளிலேயே முதல் முறையாக இவ்வளவு பெரிய தொகை பம்பர் டிக்கெட்டுக்கு வழங்கப்பட உள்ளது. முதல் பரிசு அடித்தால் வாழ்நாளில் நினைத்து பார்த்திராத திருப்பம் ஏற்படும் அளவுக்கு பணம் வந்து சேரும் என்பதால் விற்பனை தொடங்கும் முன்பே இந்த டிக்கெட்டுகளுக்கு கேரளா லாட்டரி பிரியர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டு இருக்கிறது.

    கேரளாவுக்கு வந்து செல்லும் வெளி மாநிலத்தவர்களும் பம்பர் டிக்கெட்டை வாங்க கூடும் என்பதால் மொத்தம் 90 லட்சம் டிக்கெட்டுகள் அச்சிட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த டிக்கெட் ஒன்றின் விலை ரூபாய் 500 ஆகும். முதல் பரிசு 30 கோடி மட்டுமின்றி இரண்டாவது, மூன்றாவது பரிசிலும் பெரிய அளவில் பணம் வழங்கப்படுகிறது.

    Advertisement

    20 பேருக்கு தலா 1 கோடி ரூபாய்

    இரண்டாவது பரிசு 20 டிக்கெட்களுக்கு தலா ஒரு கோடியும், மூன்றாவது பரிசு 20 டிக்கெட்டுகளுக்கு தலா ரூ.25 லட்சமும், மூன்றாவது பரிசு ரூ.5 லட்சம் தலா 20 டிக்கெட்டுகளுக்கும் வழங்கப்படுகிறது. கேரளாவை பொறுத்தவரை லாட்டரி விற்பனையை மாநில அரசு ஏற்று நடத்துகிறது. மாநில அரசின் வருவாயில் கணிசமான அளவு லாட்டரி மூலமாகவே கிடைக்கிறது.

    பம்பர் டிக்கெட்டுகள் போக அங்கு தினசரி ஒரு கோடி ரூபாய் முதல் பரிசு கொண்ட லாட்டரி டிக்கெட்களும் விற்பனை செய்யப்படுகின்றன. கேரளாவுக்கு சுற்றுலா, தொழில் உள்ளிட்ட பல்வேறு நோக்கங்களுக்காக செல்லும் வெளி மாநிலத்தவர்களும் ஆர்வத்துடன் இந்த டிக்கெட்டுகளை வாங்குகின்றனர். ஒரு சிலருக்கு பரிசு அடிப்பதால் பலரும் விரும்பி வாங்குகிறார்கள்.

    Advertisement

    ரூ.30 கோடியை தூக்கப் போவது யார்?

    முதல் பரிசளித்தவருக்கு ஒரு கோடி ரூபாய் அப்படியே கையில் கொடுக்கப்படாது. ஏஜென்ட் கமிஷன், வரி பிடித்தம் போக மீதமுள்ள தொகையை கையில் கிடைக்கும். கேரளா லாட்டரிகள் விற்பனைக்கு தமிழகத்தில் தடை செய்யப்பட்டுள்ளதால் தமிழகத்தில் விற்பனை செய்வது சட்ட விரோதம் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஓணம் பம்பர் லாட்டரியில் கடந்த ஆண்டு பெயிண்ட் கடையில் வேலை செய்து வந்த தொழிலாளருக்கு முதல் பரிசு அடித்தது. எப்போதாவது லாட்டரி வாங்கும் பழக்கம் கொண்ட இவருக்கு, முதல் முறையாக பம்பர் டிக்கெட்டை வாங்கியபோது ரூ.25 கோடி முதல் பரிசாக கிடைத்து இன்ப அதிர்ச்சி அளித்தது. இதனால் வரும் ஓணம் பம்பரில், ரூ.30 கோடி முதல் பரிசு வெல்லப்போவது யார்? என்று எதிர்பார்ப்பு கேரளா லாட்டரி பிரியர்கள் மத்தியில் தற்போது தொற்றி கொண்டுள்ளது.

    English Summary

    Thiruvonam Bumper Lottery 2026: While the first prize for the Kerala Onam Bumper lottery had previously been ₹25 crore, it has been increased to ₹30 crore for the upcoming draw. This marks the first time in the history of Kerala lotteries that such a massive amount is being awarded for a single ticket. Sales for this ticket are set to begin this coming Monday.