திருவனந்தபுரம்: கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த 2024 ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலச்சரிவில் தனது குடும்ப உறுப்பினர்களை 9 பேரை இழந்து தனிமையில் வாடிய ஸ்ருதிக்கு குருவாயூர் கோயிலில் இனிதே திருமணம் நடந்தது. அவர் சக ஊழியரை கரம் பிடித்தார்.
கடந்த 2024 ஆம் ஆண்டு ஜூலை மாதம் வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்டது. அதில் முண்டக்கை பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஸ்ருதியின் பெற்றோர், சகோதரி உள்பட 9 உறுப்பினர்கள் உயிரிழந்தனர். அவரது வீடும் கடுமையாக சேதமடைந்தது.
ஸ்ருதிக்கு பார்க்கப்பட்ட மாப்பிள்ளை ஜான்சன்தான், 9 பேர் இறப்பில் இருந்து ஸ்ருதி மீள்வதற்கு பேருதவியாக இருந்தார். இந்த நிலையில் துரதிருஷ்டம் துரத்தும் என்பதை போல் ஜான்சன் கார் விபத்தில் பலியானார். அவருடன் சென்ற ஸ்ருதிக்கும் காயங்கள் ஏற்பட்டன. இனி ஸ்ருதி கேரள மக்களின் மகள் என அந்த அரசு அவருக்கு வயநாடு ஆட்சியர் அலுவலகத்தில் எழுத்தராக வேலை கொடுத்தது. இந்த நிலையில் ஸ்ருதி தனது வேலையை விரும்பி செய்தார். இந்த நிலையில் ஸ்ருதிக்கும் அவருடன் பணியாற்றி வரும் சந்தீப் என்பவருக்கும் கடந்த 7 ஆம் தேதி திருமணம் நடந்தது. குருவாயூர் கோயிலில் இவர்களது திருமணம் எளிமையாக நடந்தது. இத திருமணத்தில் இருவரது நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் கலந்து கொண்டனர். சந்தீப் மணந்தவாடி பகுதியைச் சேர்ந்தவர். இந்த திருமணத்தில் முன்னாள் அமைச்சர் கே.ராஜன் கலந்து கொண்டார். திருமணம் முடிந்தவுடன் ஸ்ருதி அங்கிருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "எனக்கு திருமணம் நடந்து விட்டது. இந்த தருணத்தில் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். எனது கடந்த காலங்கள் குறித்து அறிந்தவர்தான் இன்று என்னை கரம்பிடித்திருக்கிறார். எங்களது வாழ்வு இனிதாக அமைய எல்லாம்வல்ல இறைவனை நான் பிரார்த்திக்கிறேன்" என தெரிவித்துள்ளார். கடந்த 2024 ஆம் ஆண்டு, ஜூலை 30ஆம் தேதி வயநாடு மாவட்டத்தில் உள்ள முண்டக்கை, சூரல்மாலா, அட்டமலை, புஞ்சிரிமட்டம் ஆகிய கிராமங்களில் அதிகாலை மிகக் கொடூரமான நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த கிராமங்கள் மலைக் கிராமங்கள் என்பதால் பாறைகள் மூடப்பட்டு இருந்த சுவடே தெரியாத அளவுக்கு அழிந்துவிட்டன. நிலச்சரிவில் சிக்கி 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பலர் காணாமல் போனார்கள். சூரல்மாலா பாலம் அடித்துச் செல்லப்பட்டது. இதையடுத்து இந்திய ராணுவத்தினர் மிகவும் குறுகிய காலத்தில் இரும்புப் பாலவத்தை அமைத்து தந்தார்கள். கேரளாவில் நடந்த மோசமான இயற்கை பேரிடர்களில் ஒன்று இதுவாகும். கடவுளின் தேசம் கண்ணீர் தேசமானது. இந்த நிலச்சரிவில்தான் ஸ்ருதி என்பவர் தனது குடும்பத்தினரை இழந்து ஆதரவற்ற நிலையில் இருந்தார். பிறகு அவருக்கு எல்லாமுமாக இருந்த அவருக்கு பெற்றோரால் பார்த்து வைத்த மாப்பிள்ளையும் கார் விபத்தில் உயிரிழந்தார். இதையடுத்து வாழ்க்கையே இருண்டது போல் உணர்ந்த ஸ்ருதிக்கு அப்பகுதி மக்களும் கேரள மாநில அரசும் ஆதரவு கொடுத்தது. அது போல் ராகுல் காந்தியும் ஸ்ருதிக்கு கடிதம் மூலம் ஆறுதல் தெரிவித்திருந்தார். இப்படி எல்லாரும் கொடுத்த ஊக்கம் இன்று புது வாழ்க்கை ஸ்ருதிக்கு கிடைத்துள்ளது. அவருக்கு சமூகவலைதளங்களில் வாழ்த்துகள் குவிகின்றன.கேரள அரசு பணி
குருவாயூர் கோயிலில் எளிமையாக நடந்த திருமணம்
வயநாடு நிலச்சரிவு.. டேங்கர் லாரியால் உயிர் தப்பினோம்.. மதுரை தம்பதி கண்ணீர் மல்க பேட்டி
மகிழ்ச்சியாக இருக்கிறது- ஸ்ருதி
மோசமான நிலச்சரிவு
தண்ணீர் தேசம்
நிலச்சரிவு
புது வாழ்க்கை