மண்ணில் புதைந்த மக்கள்.. வயநாட்டில் அடிக்கடி நிலச்சரிவு ஏற்படுவது ஏன்? ஷாக் பின்னணி

  • திருவனந்தபுரம்: கேரளா மாநிலம் வயநாட்டில் இன்று மீண்டும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் பலரும் மண்ணில் புதைந்து இருக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ள நிலையில் மீட்பு பணி விரைவாக நடந்து வருகிறது. இநநிலையில் தான் கேரளாவின் வயநாட்டில் மட்டும் அடிக்கடி நிலச்சரிவு ஏற்படுவது ஏன்? அதன் பின்னணி என்ன? என்பது பற்றிய திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.

    Advertisement

    கேரளாவில் மழைக்காலங்களில் அடிக்கடி நிலச்சரிவு ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக வயநாடு மாவட்டம் தான் அதிகமாக பாதிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று வயநாட்டில் திடீரென்று நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

    Advertisement

    வயநாடு மாவட்டத்தில் கல்லாடி அருகே மீனாட்சி மேம்பாலத்தின் அருகே நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மலப்புரம் மற்றும் வயநாடு மாவட்டங்களை இணைக்கும் வகையில் அனக்கொம்பொயில் -மேம்பாடி சுரங்க ரோடு திட்டம் நடக்கும் இடத்தின் அருகே இன்று நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

    இன்று வழக்கம்போல் சுரங்க ரோடு திட்ட பணிகள் நடந்து வந்த நிலையில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் 2 பேர் பலியாகி உள்ளனர். இன்னும் சிலர் மண்ணில் புதைந்து இருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது. அவர்களை தேடும் பணியில் தீயணைப்பு வீரர்கள், தேசிய பேரிடர் மீட்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலச்சரிவின் காரணமாக சுரங்ப்பாதை பணிகளுக்கு ஆட்களை ஏற்றி சென்ற வாகனங்கள் சேதமடைந்துள்ளன. முதற்கட்ட விசாரணையில் கடந்த 24 மணிநேரத்தில் அந்த பகுதியில் 265 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. இந்த மழையின் காரணமாக தான் நிலச்சரிவு ஏற்பட்டு இருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    Advertisement

    மேலும் வயநாட்டை எடுத்து கொண்டால் அடிக்கடி நிலச்சரிவு ஏற்பட்டு வருகிறது. கடந்த 2024ம் ஆண்டு ஜூலை மாதம் 30ம் தேதி நள்ளிரவு 1.30 மணி முதல் அதிகாலை 4 மணி வரை முண்டக்கை நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 298 பேர் வரை பலியாகினர். அதற்கு முன்பாக 2007 ம் ஆண்டில் வளம்தோட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் 4 பேர், 1992ல் கப்பிக்கலாம் நிலச்சரிவில் 11 பேர், 1984ம் ஆண்டில் முண்டக்கையில் 14 பேரும் பலியாகி இருந்தனர்.

    இப்படி தொடர்ந்து வயநாட்டில் அதிகமான நிலச்சரிவு ஏற்படுவதற்கு முக்கிய காரணம் அதன் அமைவிடம் தான். மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டமாக வயநாடு அமைந்துள்ளது. நிலச்சரிவு அபாயம் அதிகம் உள்ள மாவட்டமாக வயநாடு அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. இங்கு உள்ள உயரமான மலை, அதிகப்படியான மழை உள்ளிட்டவை நிலச்சரிவுக்கு முக்கிய காரணமாகும். இந்த மலையில் உள்ள மண், கற்கள் உள்ளிட்டவை தொடர் மழையால் ஏற்படும் வெள்ளத்தில் வலுவிழப்பதால் நிலச்சரிவு அபாயம் அதிகமாக ஏற்பட்டு வருகிறது.

    Advertisement

    வயநாடு மட்டுமின்றி கேரளாவில் மலப்புரம், கோழிக்கோடு மாவட்டங்களின் எல்லை பகுதிகளிலும் நிலச்சரிவு அபாயம் உள்ள பகுதியாக உள்ளது. இருப்பினும் வயநாடு தான் அதிகம் பாதிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    English Summary

    Another landslide has occurred today in the Wayanad district of Kerala. Rescue operations are proceeding rapidly amidst fears that many people may be buried under the debris. Against this backdrop, startling information has emerged regarding why landslides occur so frequently in Wayanad and the underlying reasons behind them.