மனிதர்களை மூடிய மண்.. வயநாடு நிலச்சரிவில் உயிர் தப்பியவர்கள் வைத்த பகீர் குற்றச்சாட்டு!

  • திருவனந்தபுரம்: வயநாடு நிலச்சரிவுக்கு காரணம், சுரங்கப்பாதை கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த நிறுவனம்தான் என்று கேரள அரசு கூறியிருந்தது. இந்நிலையில், நிலச்சரிவில் உயிர் பிழைத்தவர்களும் இதே குற்றச்சாட்டை முன்வைத்திருக்கின்றனர்.

    Advertisement

    கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் கல்லடியில் உள்ள இரட்டைச் சுரங்கப்பாதை கட்டுமானப் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்திற்கு சுரங்கப்பாதை கட்டுமான நிறுவனத்தின் அலட்சியமே காரணம் என்று அப்பகுதி மக்களும் உயிர் தப்பியவர்களும் குற்றம் சாட்டியுள்ளனர்.

    Advertisement

    அனக்கம்பொயில்-கல்லடி-மேப்பாடி சுரங்கப்பாதை திட்டத்திற்காக தோண்டப்பட்ட மண்ணை, கட்டுமான நிறுவனமான 'திலிப் பில்ட்கான்' முறையற்ற வகையில் அப்பகுதியில் குவித்து வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. சுமார் 40 ஏக்கர் பரப்பளவில் ஒரு செயற்கை மலை போல இந்த மண் குவிக்கப்பட்டிருந்தது. எனவே நேற்று பெய்த கனமழையினால் இந்த மண் சரிந்து விழுந்து பெரும் விபத்தை ஏற்படுத்தியது.

    இந்த விபத்தில் இருந்து நூலிழையில் உயிர் தப்பிய ஹம்சா மந்திக்காரா என்பவர் கூறுகையில், "தோண்டப்பட்ட மண்ணை இவ்வளவு பெரிய அளவில் குவித்து வைப்பது ஆபத்தானது என்று நாங்கள் பலமுறை எச்சரித்தோம். கனமழை பெய்தால் இது சரிந்து விழும் என்று அஞ்சினோம். ஆனால் எங்கள் எச்சரிக்கையை கட்டுமான நிறுவனம் கண்டுகொள்ளவில்லை. நான் பேருந்து நிறுத்தத்தில் நின்றுகொண்டிருந்தபோது திடீரென பயங்கர சத்தம் கேட்டது. அடுத்த சில நொடிகளில் அந்த மண் மலை சரிந்து விழுந்து, நான் நின்றிருந்த பேருந்து நிறுத்தமே மண்ணுக்குள் புதைந்தது," என்று ஆவேசத்துடன் தெரிவித்தார்.

    Advertisement

    அரசாங்கத்தின் நிலைப்பாடு

    கேரள அமைச்சர்கள் டி. சித்திக் மற்றும் ரமேஷ் சென்னிதலா ஆகியோர் சம்பவ இடத்தைப் பார்வையிட்டனர். இது ஒரு "மனிதனால் உருவாக்கப்பட்ட பேரிடர்" என்று அவர்கள் விமர்சித்துள்ளனர். அறிவியல் பூர்வமற்ற முறையில் மண்ணைக் கொட்டியதே இந்த விபத்திற்கு முக்கியக் காரணம் என்றும், ஏற்கனவே இது குறித்து எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டும் நிறுவனம் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அவர்கள் குற்றம் சாட்டினர்.

    நிறுவனத்தின் விளக்கம்

    மறுபுறம், கட்டுமான நிறுவனமான திலிப் பில்ட்கான் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது. அனைத்து பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் விதிமுறைகளையும் பின்பற்றியே பணிகள் நடைபெறுவதாகவும், 24 மணி நேரத்தில் பெய்த 265 மி.மீ என்ற அதீத கனமழையே இந்த நிலச்சரிவுக்குக் காரணம் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

    Advertisement

    மீட்புப் பணிகள்

    தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF), தீயணைப்புத் துறை மற்றும் காவல்துறையினர் தொடர்ந்து மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மண்ணுக்குள் புதைந்தவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுவரை 5 உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், மேலும் சிலர் காணாமல் போயுள்ளதாக அஞ்சப்படுகிறது. காயமடைந்தவர்கள் மேப்பாடியில் உள்ள விம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    Topics: #wayanad #kerala

    English Summary

    Wayanad Landslip: The Kerala government had stated that the company engaged in tunnel construction work was responsible for the Wayanad landslide. Meanwhile, survivors of the landslide have also leveled the same allegation.