கரப்பான் பூச்சி கட்சியை நோக்கி இளைஞர்கள்.. வார்னிங் கொடுத்த துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன்


  • திருவனந்தபுரம்: ''நாம் 2047 ம் ஆண்டுக்குள் வளர்ந்த நாடாக மாற வேண்டும் என்று விரும்புகிறோம். இதற்கு சமூகத்தின் ஒவ்வொருவரின் பங்கும் அவசியம். இதனால் நேர்மறையன செய்திகளை உரிய முறையில் வெளியிட வேண்டும். இல்லாவிட்டால் இளைஞர்கள் சிஜேபிஐ (கரப்பான்பூச்சி ஜனதா கட்சி) பின்தொடர்வார்கள்'' என்று துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் வார்னிங் செய்துள்ளார்.

    Advertisement

    கேரளாவின் மலையாள நாளிதழான 'தீபிகா'வின் 140வது ஆண்டு விழா இன்று நடந்தது. இந்த விழாவில் துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

    Advertisement

    நாம் 2047 ம் ஆண்டுக்குள் வளர்ந்த நாடாக மாற வேண்டும் என்று விரும்புகிறோம். இதற்கு சமூகத்தின் ஒவ்வொருவரின் பங்கும் அவசியம். அப்போது தான் அதனை சாதித்து காட்ட முடியும். இந்திய சமூகத்தை வடிவமைப்பதிலும், இளைஞர்களுக்கு சரியான தகவல்களை உரிய நேரத்தில் கொண்டு செல்வதில் ஆக்கப்பூர்வமான பத்திரிகைகள் தேவை.

    நேர்மறையான செயல்களை அதிகமாக வெளியிட வேண்டும். அப்போது தான் இளைஞர்களுக்கு சரியான தகவல்கள் கிடைக்கும்.இல்லாவிட்டால் அவர்கள் ஆர்வத்தை இழந்து 'கரப்பான்பூச்சிகளை'(மறைமுகமாக கரப்பான்பூச்சி ஜனதா கட்சி) பின்தொடர்வார்கள்.

    மேலும் ஏதாவது ஒன்று உண்மையிலேயே நன்றாக இருந்தால் மக்கள் அதன் மதிப்பை உணர்ந்து ஒரு வாரம், 10 நாட்கள் அல்லது ஒரு மாதத்துக்கு பிறகும் கூட அங்கீகரிப்பார்கள். சமீபத்தில் டிரெண்டான கரப்பான்பூச்சி கட்சியை பற்றி யாருக்கும் தெரியாது. அவர்களால் நீடிக்க முடியாது. ஏனென்றால் தற்காலிக புகழ் எப்போதுமே நீண்டகாலம் நீடிக்காது'' என்றார்.

    Advertisement

    அதாவது சமீபத்தில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் போலி சான்று தொடர்பான வழக்கு ஒன்றை விசாரித்தார். விசாரணையின்போது. ''இப்போது கரப்பான்பூச்சி, ஓட்டுண்ணிகளை போல் வேலையில்லாத சில இளைஞர்கள் சமூக ஊடகங்கள் மூலமாக ஊடகவியலாளர்கள் போலவும், சமூக ஊடக ஆர்வலர்களாக தங்களை காட்டிகொண்டு அனைவரையும் விமர்சனம் செய்து தாக்கி பேசி வருகின்றனர்'' என்று கூறினார். இதற்க எதிராக 'கரப்பான்பூச்சி ஜனதா கட்சி' என்ற சமூக வலைதள பக்கம் தொடங்கப்பட்டது.

    கடந்த 16ம் தேதி 'Cockroach Janta Party' உருவானது. இதனை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை கோடிகளை கடந்துள்ளது. காங்கிரஸ், பாஜகவை விட இந்த கட்சியின் வலைதளத்தை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை கிடுகிடுவென அதிகரித்துள்ளது. 22 மில்லியனுக்கும் (ஒரு மில்லியன் என்பது 10 லட்சம்) அதிகமானவர்கள் இன்ஸ்டாகிராமில் பின்தொடர்ந்தனர். காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்பட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் இந்த பக்கங்களை ஃபாலோ செய்ய தொடங்கினர். இந்த பக்கத்தில் தொடர்ந்து இந்தியாவுக்கு எதிராக பதிவுகள் செய்யப்பட்டன.

    Advertisement

    இதுதொடர்பாக உளவுத்துறை விசாரணை மேற்கொண்டது. அப்போது அபிஜித் திப்கே என்பவர் தான் இந்த பக்கத்தை தொடங்கியது தெரியவந்தது. மகாராஷ்ராடிவை சேர்ந்தவர் இவர் புனேவில் ஜார்னலிசம் படிப்பை முடித்தார். அதன்பிறகு மேல்படிப்புக்காக அமெரிக்கா சென்றார். அங்குள்ள பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் பப்ளிக் ரிலேஷன் என்ற துறையில் மாஸ்டர் படிப்பை படித்து வருகிறார். இதையடுத்து அதன் சமூக வலைதள பக்கங்கள் முடக்கம் செய்யப்பட்டன. இந்நிலையில் தான் துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் மேற்கூறியவாறு வார்னிங் செய்துள்ளார்.

    English Summary

    Vice President Radhakrishnan says that, "We want to become a developed nation by the year 2047. For this to happen, the contribution of every member of society is essential. Therefore, positive messages must be disseminated in an appropriate manner. Otherwise, the youth will end up following the CJPI (Cockroach Janta Party),".