ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை வரவு வைப்பு! 2வது மாதமாக பணத்தை போட்டது தவெக அரசு!

  • சென்னை: முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு புதியதாக பொறுப்பேற்ற பின்னர், மகளிர் உரிமைத் தொகை ரூ.1000 லிருந்து ரூ.2500 ஆக அதிகரிக்கப்படும் என்று எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், இந்த மாதமும் ரூ.1000 உரிமைத்தொகை வரவு வைக்கப்பட்டிருக்கிறது.

    Advertisement

    திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்கள், தவெக ஆட்சியில் நிறுத்தப்படுமோ என்கிற அச்சம் பரவலாக இருந்தது. ஆனால், இந்த திட்டங்களை முதலமைச்சர் விஜய் அப்படியே செயல்படுத்தி வருகிறார். நாங்கள் ஆட்சி அதிகாரத்திற்கு வந்தால், உரிமைத் தொகை ரூ.2500 ஆக அதிகரித்து வழங்கப்படும் என்று விஜய் கூறியிருந்தார். ஆனால், நிதி நெருக்கடி காரணமாக தற்போது இரண்டாவது மாதமாக ரூ.1000 மட்டுமே குடும்ப தலைவிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டிருக்கிறது.

    Advertisement

    தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை

    குடும்ப தலைவிகளும் உழைக்கின்றனர். ஆனால், அந்த உழைப்புக்கு எந்த ஊதியமும் வழங்கப்படுவதில்லை என்று சமூக ஆர்வலர்கள் பேச தொடங்கியிருந்தனர். இப்படி இருக்கையில்தான் கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில், பெண்களுக்கு மாதம் ரூ.1000 உரிமைத்தொகையாக வழங்கப்படும் என்று மு.க.ஸ்டாலின் வாக்குறுதி அளித்திருந்தார்.

    இதனை தொடர்ந்து, அவர் ஆட்சிக்கு வந்ததும் சில மாதங்கள் கழித்து, மகளிர் உரிமைத் தொகை திட்டம் அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக தமிழகம் முழுவதும் சமானிய மக்கள் பலன் பெற்றனர்.

    இப்படி இருக்கையில்தான், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மாதம் ரூ.2500 கொடுப்போம் என்று தவெக வாக்குறுதி கொடுத்திருந்தது. தற்போது தவெக ஆட்சி பொறுப்புக்கு வந்திருப்பதால், ரூ.2500 வரவு வைக்கப்படுமா? என்கிற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், வழக்கம் போல ரூ.1000 மட்டும் இரண்டாவது மாதமாக வரவு வைக்கப்பட்டிருக்கிறது.

    English Summary

    Magalir Urimai Thogai: After the TVK government led by Chief Minister Vijay assumed office, there was an expectation that the women's entitlement allowance would be increased from ₹1,000 to ₹2,500. However, the allowance of ₹1,000 has been credited this month as well.