அம்பை தொகுதியில்.. பொது வேட்பாளராக களமிறக்கப்படும் சீமான்? இடைத்தேர்தலில் பெரிய ட்விஸ்ட்!

  • திருநெல்வேலி: எதிர் வரும் இடைத்தேர்தலில் அம்பாசமுத்திரம் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பொது வேட்பாளராக களமிறக்கப்படலாம் என்று பேச்சுகள் அடிப்பட்டு வருகின்றன.

    Advertisement

    கடந்த சட்டமன்ற தேர்தலில், காரைக்குடி தொகுதியில் போட்டியிட்ட சீமான், தவெக வேட்பாளரிடம் தோல்வியைடந்தார். எனவே, எதிர்வரும் இடைத்தேர்தலில் அவர் அம்பை சட்டமன்ற தொகுதியிலிருந்து போட்டியிடலாம் என்று சொல்லப்படுகிறது.

    Advertisement

    சீமான் நிலைப்பாடு

    சீமான் அரசியல் கட்சியை தொடங்கியதிலிருந்து தனது அரசியல் நிலைப்பாட்டை தொடர்ந்து மாற்றி வந்திருக்கிறார். ஆரம்பத்தில் பெரியார் தன்னுடைய கொள்கை தலைவர் என்று ஏற்றுக்கொண்ட அவர், அடுத்தடுத்த காலங்களில் பெரியாரை கடுமையாக விமர்சித்திருந்தார். கடந்த சட்டமன்ற தேர்தலின்போது, விஜய் தலைமையிலான தவெகவை மிக கடுமையாக விமர்சித்திருந்தார். அதே நேரம், திமுக மற்றும் அதிமுகவையும் விமர்சித்திருந்தார்.

    திராவிட எதிர்ப்பு

    திராவிட கட்சிகளால்தான் தமிழ்நாடே நாசாமாகிவிட்டது என்றும், திராவிடம் என்றெலாம் கிடையாது.. தமிழ், தமிழினம்தான் என்று பேசி வந்தார். இப்படி இருக்கையில்தான், சட்டமன்ற தேர்தலில் காரைக்குடி தொகுதியில் போட்டியிட்டு வெறும் 30,000 வாக்குகள் மட்டும் பெற்று தோல்வியடைந்திருந்தார். இந்த தொகுதியில் போட்டியிட்ட தவெக வேட்பாளர் சுமார் 1 லட்சம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

    Advertisement

    பொது வேட்பாளர்

    இப்படி இருக்கையில் அம்பை தொகுதியின் அதிமுக எம்எல்ஏ தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தவெகவில் இணைந்துவிட்டார். எனவே, அம்பை உட்பட 6 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடக்க இருக்கிறது. எனவே திமுக மற்றும் அதிமுக சார்பில் சீமான் அம்பை தொகுதியில் பொது வேட்பாளராக நிறுத்தப்படுவார் என்று பேச்சுக்கள் அடிபடுகின்றன. மறுபுறம், கடும் விமர்சனம் செய்த திராவிட கட்சிகளின் தயவில்தான் சீமான் எம்எல்ஏக ஆக போகிறாரா? என்றும் கேள்விகள் எழுந்திருந்தன.

    இது குறித்து நாதக நிர்வாகிகள் கூறுகையில், "அம்பை தொகுதியில் சீமான் போட்டியிடுவது உறுதி. ஆனால், பொது வேட்பாளராக அவர் நிறுத்தப்பட மாட்டார்" என்று கூறுகின்றனர்.

    English Summary

    Ambasamudram Bypoll Twist: There is talk that Seeman, the Chief Coordinator of the Naam Tamilar Katchi, might be fielded as a candidate in the Ambasamudram constituency for the upcoming by-election.