தென்காசியில் நடைபயிற்சி சென்றவரை மிதித்துக் கொன்ற யானை! உடலை எடுக்க விடாமல் உறவினர்கள் வாக்குவாதம்

  • தென்காசி: தென்காசி அருகே புளியரையில் யானை மிதித்து ஓய்வுபெற்ற அரசு ஊழியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. யானை மிதித்ததில் ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சுப்பையா என்ற 70 வயது நபர் உயிரிழந்துள்ளார். உடலை எடுத்து செல்ல விடாமல் வனத்துறை, காவல்துறையினருடன் உறவினர்கள் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு உண்டானது.

    Advertisement

    தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டியுள்ள இடம் புளியரை சக்திமேடு பகுதியை சேர்ந்தவர் சுப்பையா (வயது 70). நெடுஞ்சாலைத்துறை அரசு ஊழியராக இருந்து ஓய்வு பெற்றவர். இவருக்கு சொந்தமாக அப்பகுதியில் தோட்டம் உள்ளது. இதனால் தினமும் அவர் தோட்டத்திற்கு சென்று அப்படியே நடைபயிற்சி செல்வது வழக்கம்.

    Advertisement

    அந்த வகையில் இன்று தோட்டத்திற்கு நடைபயிற்சியாக சென்ற சுப்பையா உடல் நசுங்கி கிடப்பதாக தகவல் வந்தது. இதையடுத்து போலீசார் மற்றும் வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரி சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தப்பட்டது. இதில் அவர் யானை மிதித்து உயிரிழந்து இருப்பது தெரியவந்தது. சுப்பையா இன்றும் அதிகாலை வழக்கம் போல் தோட்டத்திற்கு வந்துள்ளார்.

    சென்னை டூ குமரி, தென்காசிக்கு சிறப்பு ரயில்கள்.. தீபாவளிக்கு இன்ப அதிர்ச்சி தந்த தெற்கு ரயில்வே.. புக்கிங் எப்போது?

    அப்போது யானைகள் கூட்டமாக இருப்பதை பார்த்து சுப்பையா பதறி அடித்துக்கொண்டு அலறியபடி ஓடியதாகவும், இதில் யானை மிதித்து அவர் உயிரிழந்தார் என்றும் அப்பகுதியினர் கூறியுள்ளனர். அடிக்கடி இங்கு யானைகள் நடமாட்டம் இருப்பதாக வனத்துறையினரிடம் புகார் கூறி வந்தோம். ஆனால் இதனை ஒரு பொருட்டாகவே எடுக்கவில்லை எனவும் இதேபோன்று உயிரிழப்புகள் தொடர்ந்து அரங்கேறி வருவதாகவும் அப்பகுதி மக்கள் வனத்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    Advertisement

    ஏற்கனவே யானை நடமாட்டம் அதிகமாக இருப்பதாக வனத்துறையிடம் கடிதம் மற்றும் புகார் வைத்து நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில் தற்போது ஓய்வுபெற்ற அரசு ஊழியர் யானை மிதித்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. இதனால் யானைகள் நடமாட்டத்தை குறைக்க வனத்துறையினர் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார்கள் என்பதை எழுத்துப்பூர்வமாக கொடுத்தால் தான் உடலை பெற்றுக்கொள்வோம் என்று உறவினர்கள், குடும்பத்தினர், விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    7 மணி நேர அனுமதி.. 6 நாளில் அசாம் டூ மதுரை! கோவில் யானை விற்பனையில் பாஜக - தவெக அரசு முறைகேடு?
    Advertisement

    உடனடியாக இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும், சுப்பையாவின் உடலை எடுக்கும் முன்பாக எங்களுக்கு அவர் உயிரிழந்ததற்கான காரணம் என்ன என்பதை கடிதமாக எழுதி தர வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். அதன்பேரில் வனத்துறை அதிகாரிகளும் கடிதம் மூலமாக அவர் உயிரிழந்ததற்கான காரணத்தை கூறினர். இதையடுத்து அவர் உடல் பிரேத பரிசோதனைக்காக எடுத்து செல்லப்பட்டது. விளைநிலங்களுக்கு யானை புகுவதை தடுக்க நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.

    English Summary

    Tenkasi elephant: A retired government employee has died after being trampled by an elephant in Puliyarai, near Tenkasi. The victim, 70-year-old Subbaiah, succumbed to his injuries following the incident. A tense situation arose when his relatives argued with forest department officials and the police, refusing to allow them to remove the body.