கொடைக்கானல் வந்த சுற்றுலா பயணிகளுக்கு ஷாக்.. போர்டை பார்த்ததுமே ஏமாற்றம்.. அதிரடி உத்தரவு

  • கொடைக்கானல்: பள்ளிகளுக்கான காலாண்டுத் தேர்வு விடுமுறை, வார இறுதி நாட்கள் மற்றும் வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் ஆகிய காரணங்களால், அடுத்த ஒரு வாரத்தில் கொடைக்கானலுக்குப் பெருமளவிலான சுற்றுலாப் பயணிகள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்றே ஏராளமானோர் கொடைக்கானலில் குவிந்து வரும் நிலையில், நாளை (ஞாயிற்றுக்கிழமை) கூட்டம் மேலும் அதிகரிக்கும் எனத் தெரிகிறது.

    Advertisement

    இந்நிலையில், கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் ரீல்ஸ் எடுக்கும் மோகத்தால் ஆபத்தான அருவிப் பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்க்கும் வகையில், மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. குறிப்பாக, ஓராவி மற்றும் பெப்பர் அருவிகளுக்குச் செல்ல முழுமையாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    நீர்வரத்துக் குறைவு மற்றும் ஆபத்துக்கள்

    கொடைக்கானலில் தற்போது இதமான காலநிலை நிலவினாலும், இந்த ஆண்டு தென்னகப் பகுதிகளில் எதிர்பார்த்த அளவிற்குத் தென்மேற்குப் பருவமழை பெய்யவில்லை. இதனால் ஆறுகள் மற்றும் அருவிகளில் போதிய நீர்வரத்து இல்லை. எப்போதாவது சில இடங்களில் தற்காலிகமாக நீர்வரத்து ஏற்படுவதை சமூக வலைதளங்களில் பார்த்துவிட்டு, பலர் அந்த இடங்களுக்குச் செல்ல ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால், அப்பகுதிகள் எவ்வளவு ஆபத்தானவை என்பதை உணராமல் சென்று, கடந்த சில மாதங்களில் சிலர் உயிரிழந்த அதிர்ச்சி சம்பவங்களும் நடந்துள்ளன.

    18 ஆண்டுகளுக்கு குறைவாக பணியாற்றிய அரசு ஊழியர்களுக்கு எவ்வளவு கிடைக்கும்.. சந்தேகங்களுக்கு விளக்கம்
    Advertisement

    வடகிழக்குப் பருவமழை எச்சரிக்கை:

    இதனிடையே, எல் நினோ தாக்கத்தின் காரணமாக இந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை இயல்பை விட அதிகமாகப் பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. வழக்கமாக வடகிழக்குப் பருவமழை காலத்தில் தேனி, திண்டுக்கல், கோவை, நீலகிரி உள்ளிட்ட மலைப் பகுதிகளில் அதிகளவில் மழை பொழியும். இந்த முறை மழைப்பொழிவு இயல்பை விடக் கூடுதலாக இருக்கும் என்பதால், அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

    அருவிகளுக்குச் செல்லத் தடை - பெயர்ப்பலகை வைப்பு

    இதன் தொடர்ச்சியாக, நீர்வரத்து திடீரென அதிகரிக்க வாய்ப்புள்ளதால், புகழ்பெற்ற வில்பட்டி ஊராட்சியில் உள்ள ஓராவி அருவி மற்றும் பள்ளங்கி கோம்பைப் பகுதியில் உள்ள பெப்பர் அருவி ஆகிய இடங்களுக்குச் சுற்றுலாப் பயணிகள் செல்ல திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தித் தடை விதித்து உத்தரவிட்டார்.

    Advertisement
    திண்டுக்கல் கொடைரோட்டில் ஒரே நாளில் 3 கோயில்கள் இடித்து அகற்றம்.. அதிகாரிகள் நடவடிக்கை ஏன்

    திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரின் உத்தரவைத் தொடர்ந்து, கொடைக்கானல் வட்டார வளர்ச்சி அலுவலர் குமரன் ஆலோசனையின் பேரில், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பிரேம்குமார், வில்பட்டி ஊராட்சிச் செயலாளர் துரைப்பாண்டி ஆகியோர் தலைமையில் ஓராவி மற்றும் பெப்பர் அருவிப் பகுதிகளில் தடை விதிக்கப்பட்டதைக் குறிக்கும் பெயர்ப்பலகைகள் வைக்கப்பட்டன.

    இதுகுறித்து வட்டார வளர்ச்சித் துறை அதிகாரிகள் கூறுகையில், "இந்தத் தடை உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது. உத்தரவை மீறி அருவிப் பகுதிகளுக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகள், உள்ளூர் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டுநர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்" என எச்சரித்தனர். மாவட்ட நிர்வாகத்தின் இந்த அதிரடி நடவடிக்கையால் கொடைக்கானலுக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் சற்றே ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

    English Summary

    A ban has been imposed on tourists visiting Kodaikanal from venturing to dangerous waterfalls, a trend driven by the craze for making 'Reels'. Specifically, access to Oravi and Pepper Falls has been prohibited.