கோடையிலும் கொட்டும் அருவிகள்.. தென் மாவட்ட டூரிஸ்ட்கள் மிஸ் பண்ணக்கூடாத ஜில் ஸ்பாட்ஸ்


  • சென்னை: கோடை வெயில் வாட்டி வதைக்கும் சூழலிலும் தென் தமிழகத்தில் சில அருவிகள் ஆண்டு முழுவதும் ஆர்ப்பரித்து கொட்டிக்கொண்டே இருக்கின்றன. நெல்லை மாவட்டத்தின் அகஸ்தியர் அருவி, மணிமுத்தாறு அருவி உள்ளிட்ட இடங்கள் இயற்கை அழகும், குளிர்ச்சியான சூழலும் நிறைந்திருப்பதால் சுற்றுலா பயணிகளின் விருப்பமான ஜில் ஸ்பாட்களாக திகழ்கின்றன. குடும்பத்துடன் குறைந்த செலவில் சுற்றுலா செல்ல விரும்புபவர்கள் தவறவிடக்கூடாத இடங்களாக இவை உள்ளன.

    Advertisement

    கோடை காலம் உச்சத்தில் உள்ளது. தாங்க முடியாத வெப்பம் நிலவுவதால் பள்ளிகளுக்கான விடுமுறையும் நீட்டிக்கப்பட்டுள்ளது. கோடை விடுமுறையில் பலரும் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று இருப்பதை பார்க்க முடியும். சொந்த ஊர்களில் தாத்தா, பாட்டி என சொந்த பந்தங்களுடன் சுற்றுலா தலங்களுக்கு சென்று வர பலரும் விரும்புவார்கள்.

    Advertisement

    கோடையிலும் கொட்டும் அருவிகள்

    குறிப்பாக கோடை காலத்தில் ஜில் செய்ய ஏதுவான ஸ்பாட்களே சுற்றுலா பயணிகளின் விருப்பமாக இருக்கும். அதற்காக கொடைக்கானல் ஊட்டி, எல்லாம் போனால், பட்ஜெட்டும் அதிகம் ஆகும்.. கூட்டமும் அதிகமாக இருக்கும்.. எனவே, பக்கத்தில் இருக்கும் ஊர்களில் ஒன்றிற்கு போய்விட்டு வரலாம் என நினைப்பவர்கள், அப்படி எங்கு போகலாம் என நினைப்பார்கள்.

    குறிப்பாக தென் மாவட்ட மக்களுக்கு பேவரைட் டூரிஸ்ட் ஸ்பாட்கள் என்றால் அருவிகளாகாத்தான் இருக்கும்.. கோடை காலத்தில் அருவிகளில் தண்ணீர் இருக்குமா? போக முடியுமா? என பல சுற்றுலா பயணிகள் நினைப்பது உண்டு. கோடை காலத்திலும் தண்ணீர் கொட்டும் அருவிகள் பற்றியும், அதற்கு எப்படி போகலாம் என்பது பற்றியும் இங்கே பார்க்கலாம்.

    Advertisement

    அகஸ்தியர் அருவி:

    நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையின் உள்ள களக்காடு - முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் பாபநாசத்திற்கு மேலே சேர்வலாறு அணைகள் உள்ளன. இந்த அணைகளில் இருந்து தண்ணீர் அகஸ்தியர் அருவிக்கும் நீர் மின் நிலையம் வழியாக தாமிரபரணி ஆற்றிற்கும் தண்ணீர் வரும். இதன் காரணமாக அகஸ்தியர் அருவியில் ஆண்டு முழுவதும் தண்ணீர் கொட்டும்.

    இங்கு வருடத்தில் எப்போதும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும். திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் ரயில் நிலையத்திலிருந்து 7 கி.மீ தூரத்தில் இந்த அகஸ்தியர் அருவி உள்ளது. பாபநாசம் ஃபாரஸ்ட் செக் போஸ்ட் தாண்டி அகஸ்தியர் அருவிக்கு செல்ல வேண்டும். வனத்துறையிடம் கட்டணம் செலுத்தி அருவிக்கு சென்று வரலாம். இந்த அகஸ்தியர் அருவிக்கு அருகில் சிறிய கோயில் ஒன்றும் உள்ளது.

    Advertisement

    மணிமுத்தாறு அருவி:

    அம்பை அருகே மணிமுத்தாறு ஊரில் இருந்து மணிமுத்தாறு அணை வழியாக மாஞ்சோலை தோட்டத்திற்கு செல்லும் வழியில் மணிமுத்தாறு அருவி உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையின் இயற்கை எழில் கொஞ்சும் அழகுகளை பார்த்தபடியே இந்த அருவிக்கு செல்லலாம். இந்த அருவி மணிமுத்தாறு ஆற்றில் இருந்து உருவாகி சுமார் 25 அடி உயரத்தில் இருந்து விழுகிறது.

    மழை போதிய அளவில் இருந்தால் ஆண்டு முழுவதும் தண்ணீர் ஆர்ப்பரிக்கும். இந்த அருவி வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. வனத்துறை அனுமதிக்கு பிறகே செல்ல அனுமதிக்கப்படுவார்கள். நுழைவுக்கட்டணமும் உண்டு. மழைக்காலங்களில் அருவியில் தண்ணீர் அதிவேகத்தில் கொட்டும் என்பதால் அப்போது அனுமதி கிடையாது.

    English Summary

    Waterfalls: Even during the peak summer season, waterfalls such as Agasthiyar Falls and Manimuthar Falls in South Tamil Nadu continue to attract tourists with their refreshing waters and scenic beauty. These budget-friendly destinations offer a perfect getaway for families looking to beat the heat.