தமிழ்நாட்டை நோக்கி வரும் புதிய புயல் .. நாளை மறுநாள் உருவாகும் தாழ்வுப்பகுதி.. விவரம்

  • சென்னை: தமிழ்நாட்டை நோக்கி இப்போது வரை எந்த புயலும் வரவில்லை.. முன்னதாக உருவான இரண்டு புயல்களுமே ஆந்திராவிலேயே கரையை கடந்தன. இந்த இரண்டு புயல்கள் காரணமாக திருவள்ளூர் மற்றும் சென்னையில் நல்ல மழையும் பெய்தது. ஆனால் பக்கத்தில் இருக்கும் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களை பெரிதாக பாதிக்கவில்லை.. மிக குறைவாகவே மழை பெய்தது.இந்த சூழலில் வங்கக்கடலில் 12-ந் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகி தமிழகத்தை நோக்கி மழையை சுமந்தபடி புயல் வருகிறது. இது 19-ந் தேதி தமிழகத்தையொட்டிய பகுதிகளில் கரையை கடக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

    Advertisement

    வடகிழக்கு பருவமழை தமிழ்நாட்டில் பெய்து வருகிறது. கடந்த மாதம் (அக்டோபர்) 1-ந் தேதி முதல் நேற்று வரையிலான நிலவரப்படி, தமிழ்நாடு, புதுச்சேரியில் இயல்பாக பெய்ய வேண்டிய மழை அளவான 24.3 செ.மீ.ஐ விட 4 சதவீதம் அதிகமாக அதாவது 25.4 செ.மீ. மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். ஆனால் எல்லா மாவட்டங்களிலும்இந்த மழை சரியாக பெய்யவில்லை.. பல மாவட்டங்களில் இயல்பை விட குறைவாகவே வடகிழக்கு பருவ மழை பெய்திருக்கிறது.

    Advertisement

    இந்த சூழலில் குமரிக்கடல் மற்றும் அதனையொட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் தற்போது மழை பெய்து வருகிறது. இன்றும் (செவ்வாய்க்கிழமை) மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது. இன்று, ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

    Advertisement

    இதனிடையே புதிய புயல் தமிழ்நாட்டை நோக்கி வர வாய்ப்பு உள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் 'டெல்டா வெதர்மேன்' ஹேமச்சந்தர் கூறியுள்ளார். அவர் இது பற்றி கூறும் போது, " நவம்பர் 12-ந் தேதி (நாளை மறுநாள்) தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருக்கிறது, இது படிப்படியாக வலுவடைந்து தாழ்வு மண்டலமாக வருகிற 15-ந்தேதி இலங்கையையொட்டிய வங்கக்கடல் பகுதிக்கு வந்து நிற்க வாய்ப்பு இருக்கிறது, அதன் பின்னர் மேலும் வலுப்பெற்று தமிழக கடற்கரை பகுதிகளை நோக்கி நகரக் கூடும்" இவ்வாறு கூறினார்.

    Advertisement

    டெல்டா வெதர்மேன் கூற்றுப்புபடி புயலாகவும் மாற வாய்ப்பு அதிகம் இருக்கிறது. இது தமிழகத்தை நோக்கி மழையை சுமந்தபடி வருகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் வருகிற 15-ந்தேதியில் இருந்து மழைக்கான சூழல் அதிகரித்துள்ளது. 20-ந்தேதி வரை தமிழ்நாட்டில் நல்ல மழை இருக்கும். புயலாக மாறும் பட்சத்தில் அது தமிழக பகுதிகளில் 19-ந் தேதியோ, அதற்குடுத்த நாட்களிலோ கரையை கடக்க வாய்ப்பு இருக்கிறது.

    முன்னதாக கடந்த மாதம் வங்க கடலில் இரண்டு புயல்கள் உருவாகின. முதல் புயல் அர்ணாப், இந்த புயல் விசாகப்பட்டினம் அருகே மிக தீவிரப்புயலாக கடந்த அக்டோபர் 28ம் தேதி கரையை கடந்தது. இரண்டாவது புயல் நவம்பர் 3ம் தேதி ஆந்திராவின் ஒங்கோல் அருகே கரையைக் கடந்தது. இரண்டுபுயல்களுமே மிக சில நாட்களில் ஆந்திராவில் அடுத்தடுத்து கரையை கடந்தது மிக அபூர்வமாகும்.இந்த புயல்கள் தமிழகத்தை தாக்கி இருந்தால் பாதிப்பு கடுமையாக இருந்திருக்கும். ஆந்திராவை தாக்கியதால் தமிழ்நாடு தப்பித்தது. எனினும் தமிழ்நாட்டிற்கான முதல் புயல் இன்னும் சில நாட்களில் தாக்கலாம் என்றே சொல்கிறார்கள்.

    Advertisement


    மீனவர்களுக்கு எச்சரிக்கை

    வங்கக்கடலில் 12-ந் தேதி உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுவடைந்து 15-ந் தேதி தாழ்வு மண்டலமாகவும், 15-ந் தேதிக்கு பிறகு அடுத்தடுத்த நிலையை அடைந்து, புயலாகவும் உருவெடுக்க வாய்ப்பு உள்ளது. எனவே மீனவர்கள் யாரும் 14ம் தேதி முதல் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். 14ம் தேதிக்கு முன்பாக கடலைவிட்டு கரைக்கு திரும்புவது நல்லது. ஏனெனில் அண்மையில் அபூர்வமாக அடுத்தடுத்து இரண்டு புயல்கள் குறுகிய காலத்தில் உருவானதால், முதல் புயல் கரையை கடந்ததும், கடலுக்கு சென்ற சென்னை காசிமேடு மீனவர்கள் இரண்டாவது புயலில் சிக்கி கொண்டர். இது 9 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    English Summary

    A low-pressure area is set to form over the Bay of Bengal on the 12th, which will develop into a cyclone carrying rain toward Tamil Nadu. Meteorologists state that it is likely to make landfall in areas adjacent to Tamil Nadu on the 19th.