ஒரு வழியாக வந்தது நல்ல செய்தி.. இன்னும் 4 நாட்களே இருக்கு.. 'தமிழ்நாடு வெதர்மேன்' குட்நியூஸ்

  • சென்னை: இன்னும் நான்கு நாட்களில் தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்புள்ளதாக 'தமிழ்நாடு வெதர்மேன்' பிரதீப் ஜான் கூறியுள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், "வடகிழக்கு பருவமழை அக்டோபர் 15-ஆம் தேதியை ஒட்டிய நாட்களில் (ஒன்று அல்லது இரண்டு நாட்கள் முன்ன பின்னதாக) தொடங்க வாய்ப்புள்ளது. செப்டம்பர் 21-ஆம் தேதிக்குச் பிறகு சென்னையில் மழைப்பொழிவு ஏதுமில்லை; எனவே, சென்னை மற்றும் தமிழ்நாட்டின் பல பகுதிகளுக்கும் நல்ல மழைப்பொழிவு மிகவும் அவசியமாக உள்ளது.

    Advertisement

    வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஒன்று தமிழ்நாட்டை நெருங்கி வருவதால், அது வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்குச் சாதகமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாம் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த, நம்மைப் பாதுகாக்க வரும் பருவமழையை மனதார வரவேற்போம். குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால், இந்த வளிமண்டல சுழற்சியால் புயல் ஆபத்து ஏதுமில்லை" என்று கூறியுள்ளார்.

    Advertisement

    இதனிடையே இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தென்கிழக்கு வங்கக்கடலில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளது. தற்போது அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இந்தக் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகிறது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வட தமிழ்நாடு - தெற்கு ஆந்திரக் கடற்கரையை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது.

    இதனால் தமிழகம், புதுச்சேரி மற்றும் ஆந்திராவின் கடலோரப் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும், இந்தக் காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேலும் வலுப்பெற்று மேற்கு-வடமேற்கு திசையில் நகரக்கூடும் என்றும், அதே சமயம் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புக் குறைவு என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
    PNG

    Advertisement

    தென்மேற்கு பருவமழை தமிழகத்தை ஏமாற்றிவிட்டது. குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மழை மிகக் குறைவாகப் பெய்துள்ளது. அதேபோல் தென்மேற்கு பருவமழையை பெரிதும் நம்பியிருந்த காவிரி டெல்டா மாவட்டங்களும் மிகப்பெரிய ஏமாற்றத்தைச் சந்தித்துள்ளன. வழக்கமாக தேனி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழையால் நல்ல மழை கிடைக்கும். ஆனால் இந்த முறை அங்கேயும் மழை பெரிய அளவில் பெய்யவில்லை. அதேபோல் உள்மாவட்டங்களிலும் மழைப்பொழிவு இல்லை. ஒட்டுமொத்தமாகத் தமிழ்நாடு தென்மேற்கு பருவமழையால் ஏமாற்றத்தைச் சந்தித்துள்ளது.

    இனி வடகிழக்கு பருவமழை தான் ஒரே ஆதாரமாக இருக்கிறது. இந்த முறை வழக்கத்தை விட மிக அதிகமான மழையை சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் பெறும் என நம்பப்படுகிறது. அதேபோல் கடலோர மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்ய வாய்ப்புகள் அதிகம். எனவே, முதல் சுற்று வடகிழக்கு பருவமழை மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இன்னும் 3 நாட்களில் தமிழ்நாட்டிற்குள் வரப்போகும் வடகிழக்கு பருவமழை பற்றிய இந்தத் தகவல் மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

    English Summary

    Tamil Nadu Weatherman Pradeep John has stated that the Northeast Monsoon is likely to commence in Tamil Nadu in another four days. Elaborating on this, he said, "The Northeast Monsoon is expected to begin around October 15 (give or take a day or two). There has been no rainfall in Chennai since September 21."