தென் தமிழக பகுதிகளின் மேல் வளிமண்டல சுழற்சி.. இன்று கோவை, தேனிக்கு கனமழை அலர்ட்! வானிலை மையம்

  • சென்னை: தென் தமிழக பகுதிகளின் மேல் வளிமண்டல சுழற்சி நிலவுவதாகவும், தமிழகத்தில் இன்று தேனி மற்றும் கோவை மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும் எனவும், ஏனைய மாவட்டங்களில் மிதமான மழைக்கு சான்ஸ் இருப்பதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது. தலைநகர் சென்னையை பொறுத்தவரை இன்று இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது.

    Advertisement

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதும் கனமழை விட்டு விளாசியது. தமிழகம் முழுக்கவே பரவலாக மழை கொட்டியது. அதோடு அர்னாப் புயலாலும் சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் கனமழை விடாமல் பெய்தது. முரசு புயலால் அந்த அளவுக்கு மழை இல்லை என்றாலும் ஓரளவு கனமழை, வட மற்றும் வட கடலோர மாவட்டங்களில் பெய்தது.

    Advertisement


    வளிமண்டல சுழற்சி

    நேற்று வரை தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை 22 சதவீதம் பெய்துள்ளது. இது இயல்பை விட 18 சதவீதம் கூடுதல் ஆகும். நடப்பு மாதத்தில் வங்கக் கடலில் புயல் உருவானால் அது தமிழகத்தில் தான் கரையை கடக்கும் என்றும் இதனால் இம்மாதத்தில் மழைப்பொழிவு அதிகம் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே கூறியிருந்தது. இந்நிலையில் தமிழகத்தில் இன்று கோவை, நீலகிரியில் கனமழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்ட வானிலை அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

    தென் தமிழக பகுதிகளின் மேல் சுமார் 0.9 கிமீ உயரத்தில் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் சுமார் 1.5 கிமீ உயரம் வரை ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. கடலோர கர்நாடக பகுதிகளின் மேல் சுமார் 0.9 கிமீ உயரத்தில் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.

    Advertisement

    இன்று கனமழை விடாது

    இதனால் தமிழகத்தில் இன்று புதன்கிழமை தேனி மற்றும் கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    நாளை மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழைக்கும், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், இதர தென் தமிழகம் மற்றும் வட கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம்.

    Advertisement

    6 மாவட்டங்களில் கனமழை பெய்யும்

    6 ஆம் தேதி மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை ஆகிய 6 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கும், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், இதர தென் தமிழகம் மற்றும் வட கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கும் வாய்ப்பு உள்ளது.

    7 ஆம் தேதி மதுரை, தேனி, திண்டுக்கல் மற்றும் ராமநாதபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழைக்கும், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், இதர தென் தமிழகம் மற்றும் வட கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

    Advertisement

    சென்னையில் இன்று மிதமான மழைக்கு சான்ஸ்

    சென்னையில் இன்று புதன்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32 முதல் 33 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 - 26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.. என்று கூறப்பட்டுள்ளது.

    English Summary

    Atmospheric circulation over southern Tamil Nadu: The Meteorological Centre has stated that heavy rain, accompanied by thunderstorms and lightning, is likely to occur in isolated places across the Theni and Coimbatore districts of Tamil Nadu today. Other districts may experience moderate rainfall. For Chennai, the Meteorological Centre has indicated the possibility of moderate rain accompanied by thunderstorms and lightning today.