வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி.. காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது! அலர்ட் மக்களே

  • சென்னை: வங்கக்கடலில் உருவாகியிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்திருக்கிறது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

    Advertisement

    இதன் காரணமாக வட மாநிலங்களில், குறிப்பாக மேற்கு ஒடிசாவில் மழையின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்றும் எச்சரிக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தை பொறுத்தவரை இன்று பரவலாக மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது.

    Advertisement

    முன்னதாக இன்று மதியம் வெளியிட்ட வானிலை அறிவிப்பில், "சராசரி கடல் மட்டத்தில் தெற்கு குஜராத்திலிருந்து கேரளம் வரை ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது.

    நேற்று (04-07-2026) வடமேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு ஓடிசா-மேற்கு வங்காள கடலோர பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்று (05-07-2026) காலை 0830 மணி அளவில் அதே பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இது அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து, வடக்கு ஒடிசா கடலோரத்தில் சந்த்பாலி மற்றும் பாலசோர்க்கு அருகில் உள்ள திகாவிர்க்கு இடயே கரையை கடக்கக்கூடும். இது மேலும் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, 24 மணி நேரத்தில் வடக்கு ஒடிசா மற்றும் வடக்கு சத்தீஸ்கர் பகுதிகளை நோக்கி நகரக்கூடும்.

    Advertisement

    05-07-2026: கோயம்புத்தூர், நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கனமழை பெய்யக்கூடும்.

    ஏனைய மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    Advertisement

    06-07-2026 மற்றும் 07-07-2026: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    08-07-2026: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    Advertisement

    09-07-2026 முதல் 11-07-2026 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    சென்னை வானிலை

    இன்று (05-07-2026): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37-38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    நாளை (06-07-2026) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37-38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29* செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

    English Summary

    Bay of Bengal Depression: The India Meteorological Department has warned that the deep depression formed over the Bay of Bengal has now intensified into a depression.