Weather: வங்கக் கடலில் இன்று உருவாகிறது புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி! ‘முரசு’ புயலாக மாறுகிறதா?

  • சென்னை: வங்கக் கடலில் இன்று உருவாகிறது புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி. இந்த நிகழ்வு தொடர்ந்து வலுப்பெற்று புயலாகவும் மாறுவதற்கு சாதகமான சூழல் அதிகமாகவே இருக்கிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது.

    Advertisement

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நேற்று முன்தினம் தமிழக கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் தென்மேற்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, நேற்று காலை 8.30 மணி நிலவரப்படி குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழகம், கேரளப் பகுதிகளில் நிலவுகிறது.

    Advertisement

    இன்று தமிழ்நாட்டில் மழை

    இதனால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், தாய்லாந்து மற்றும் மியான்மர் பகுதிகளில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, வடக்கு அந்தமான் கடல் பகுதிக்கு நகர்ந்துள்ளது. இது மேற்கு - வடமேற்கு திசையில் நகர்வதால் இன்று (அக்டோபர் 23-ந் தேதி) தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளது.

    இந்தப் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி பின்னர் வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுப்பெற வாய்ப்புள்ளது. இதனால் இன்று கன்னியாகுமரி, நீலகிரி, கோயம்புத்தூர் ஆகிய 3 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளது. ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, தேனி, தென்காசி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, அரியலூர், கடலூர், விழுப்புரம், திருப்பூர், பெரம்பலூர், சென்னை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களிலும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

    Advertisement

    நாளை மழைக்கு வாய்ப்பு

    நாளை (அக்டோபர் 24) திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப் பகுதிகள், கன்னியாகுமரி, கோயம்புத்தூர், நீலகிரி ஆகிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும். திருப்பூர், ஈரோடு, திருச்சி, திருவண்ணாமலை, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, மதுரை, தேனி, திண்டுக்கல், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, சிவகங்கை, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களிலும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    நாளை மறுநாள்

    நாளை மறுநாள் (அக்டோபர் 25) நீலகிரி, கோயம்புத்தூர், புதுக்கோட்டை, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, தேனி ஆகிய 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளது. திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, திருவண்ணாமலை, அரியலூர், பெரம்பலூர், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னை ஆகிய மாவட்டங்களிலும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்யக்கூடும்.

    Advertisement

    அக்டோபர் 26

    அக்டோபர் 26 ஆம் தேதி, நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை ஆகிய 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும். தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, நாமக்கல், ஈரோடு, திருப்பூர், கரூர், திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, திருச்சி, தூத்துக்குடி, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம், தர்மபுரி, சேலம், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருவள்ளூர், சென்னை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களிலும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    சென்னை நிலவரம்

    சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இன்று வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் மிதமான அல்லது கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 31 முதல் 32 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 முதல் 26 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    Advertisement

    காற்றழுத்த தாழ்வுப் பகுதி

    அரபிக்கடலில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஏற்கனவே உருவாகி இருந்தது. அது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து சோமாலிய கடற்கரைப் பகுதிகளை நோக்கிச் சென்றது. குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தென் கிழக்கு வங்கக்கடல் மற்றும் மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் உருவாக வாய்ப்பு உள்ளது. இது மேலும் வலுவடைந்து மேற்கு தென் மேற்கு திசையில் நகரும்.

    முரசு புயல்

    இந்த நிகழ்வு தொடர்ந்து வலுப்பெற்று புயலாகவும் மாறுவதற்கு சாதகமான சூழல் அதிகமாகவே இருக்கிறது. அவ்வாறு புயலாக மாறினால், அடுத்து வரும் புயலுக்கு முரசு என்று பெயர் வைக்கப்பட உள்ளது. இந்த புயலின் தாக்கம் தமிழகத்துக்கு இருக்காது. நவம்பரில் தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இயல்பைவிட அதிகமாகவே பெய்ய வாய்ப்பு இருக்கிறது. அதேபோல், இந்த ஆண்டும் பருவமழை ஜனவரி மாதம் 2-வது வாரம் வரை நீடிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

    English Summary

    A new low-pressure area is forming in the Bay of Bengal today. It has been reported that conditions are highly favorable for this system to intensify further and potentially develop into a cyclonic storm. Meanwhile, with the Northeast Monsoon intensifying, heavy rainfall is being experienced across various parts of Tamil Nadu.