சென்னை: வங்கக்கடலில் உருவாகியிருந்த காற்றழுத்த தாழ்வு மையமானது, தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. இப்படி இருக்கையில், வட மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடையும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
Advertisement
ஏற்கெனவே குஜராத், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை தீவிரமடைந்திருக்கிறது. இப்படி இருக்கையில், இந்த மழை மேலும் தீவிரமடையும் என்று எச்சரிக்கப்பட்டிருக்கிறது.
Advertisement
மும்பையில் கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கிறது. மழையின் பாதிப்பு அதிகமாக இருப்பதால், இன்று மதியம் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.