சென்னையில் இன்று மழைக்கு வாய்ப்பு.. காலையிலேயே 5 மாவட்டங்களுக்கு அலர்ட் விடுத்த வானிலை மையம்!

  • சென்னை: தமிழகத்தில் இன்று முதல் வரும் 25 ஆம் தேதி வரை லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், உள் தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு இயல்பை விட வெயிலின் தாக்கம் அதிகரிக்கக் கூடும் எனவும் வானிலை மையம் கூறியுள்ளது. தலைநகர் சென்னையில் இன்று வானம் மேகமூட்டத்துடனும், லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.

    Advertisement

    இதே போன்று அடுத்த ஒரு மணி நேரத்தில் தமிழகத்தில் 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் கூறியிருந்தது. இது தொடர்பாக வெளியான வானிலை அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

    Advertisement

    10 மணி வரை 5 மாவட்டங்களில் மழைக்கு சான்ஸ்

    "தமிழகத்தில் இன்று காலை 10 மணி வரை கோவை, நீலகிரி, தென்காசி, தேனி, திருப்பூர் ஆகிய 5 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது" என தெரிவித்துள்ளது. தமிழகத்தில் சென்னையில் கடந்த இரு நாட்களாக வானம் மேகமூட்டத்துடனும், ஒரு சில இடங்களில் லேசான மழையும் பெய்து வந்தது. இன்றும் சென்னையில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது. இது தொடர்பான அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

    Advertisement

    வட தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுகிறது. இதனால் இன்று முதல் 23 ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.

    24 ஆம் தேதி, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வடக்கு கடலோர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஒரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். 25 ஆம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும்.

    Advertisement

    அதிகபட்ச வெப்பநிலை

    இன்று முதல் 23 ஆம் தேதி வரை கடலோர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை ஒட்டியும், உள் தமிழகம் மற்றும் ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களில் 2-3 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.

    சென்னையில் இன்று மழைக்கு சான்ஸ்

    சென்னையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37-38 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்" என்று கூறப்பட்டுள்ளது.

    Advertisement

    ஏற்கனவே கடந்த இரு தினங்களாக சென்னையில் வானம் மேகமூட்டத்துடனேயே காணப்படுகிறது. நேற்று முன் தினம் திடீரென கொட்டத் தொடங்கிய மழையால் சென்னை நகரம் குளிர்ந்தது. அதன் பிறகு பெரிய அளவில் வெயில் இல்லாமல் இருந்து வருவதால் சென்னையில் வெப்பத்தின் தாக்கம் குறைந்துள்ளது. ஒரு சில இடங்களில் லேசான மழையும் பெய்து வருகிறது.

    English Summary

    The Meteorological Department has stated that there is a possibility of light rain in Tamil Nadu from today until the 25th, and that temperatures in the interior regions of the state may rise above normal levels over the next three days. Regarding the capital, Chennai, the department has forecast cloudy skies and a chance of light rain for today.