சென்னை உட்பட.. 16 இடங்களில் சதம் அடித்த வெயில்! ஈரோட்டில் அதிகபட்சமாக 106 டிகிரி பதிவு!

  • சென்னை: தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இன்று சென்னை உட்பட 16 இடங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை கடந்து பதிவாகியிருக்கிறது.

    Advertisement

    சென்னையை பொறுத்தவரை 105 டிகிரி பாரன்ஹீட் பதிவாகியிருக்கிறது. அதிகபட்சமாக ஈரோடு மற்றும் வேலூரில் சுமார் 106 டிகிரி அளவுக்கு வெயில் பதிவாகியிருக்கிறது.

    Advertisement

    • ஈரோடு - 106.52F
    • வேலூர் - 106F
    • சென்னை மீனம்பாக்கம் - 105.44F
    • திருத்தணி - 104F
    • மதுரை நகரம் - 102.92F
    • நுங்கம்பாக்கம் - 102.56F
    • தஞ்சாவூர் - 102F
    • கடலூர் - 100.22F
    • கரூர் பரமத்தி - 102F
    • நாகப்பட்டினம் - 100.76F
    • நாமக்கல் - 100.76F
    • பாளையங்கோட்டை - 100F
    • பரங்கிபேட்டை - 100F
    • தூத்துக்குடி - 100F

    என வெயில் பதிவாகியிருக்கிறது. இன்று போலவே அடுத்த 2 நாட்களுக்கு சென்னை மற்றும் அதனை ஒட்டியுள்ள மாவட்டங்களில் வெளிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என தனியார் வானிலை ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர்.

    முன்னதாக இன்று மதியம் சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்திருந்த அறிவிப்பில்,

    Advertisement

    23-05-2026: நீலகிரி, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும். வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    24-05-2026: நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, நாமக்கல், கரூர், திண்டுக்கல், தேனி மற்றும் மதுரை மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும். தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    Advertisement

    25-05-2026: கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல், ஈரோடு, நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும்.

    தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    26-05-2026: கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல், மதுரை, ஈரோடு, சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும். தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    Advertisement

    27-05-2026 மற்றும் 28-05-2026: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான பெய்யக்கூடும்" என தெரிவிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    English Summary

    Chennai: The intensity of the heat in Tamil Nadu continues to rise. Against this backdrop, temperatures exceeding 100 degrees Fahrenheit were recorded today in 16 locations, including Chennai. Specifically in Chennai, a temperature of 105 degrees Fahrenheit was recorded. The highest temperatures—reaching approximately 106 degrees—were recorded in Erode and Vellore.