சென்னை: சென்னையில் நேற்றிரவு குறுகிய நேரத்தில் அதிதீவிர கனமழை கொட்டி தீர்த்தது. பல இடங்களில் வெறும் ஒரு மணி நேரத்தில் தீவிர மழை கொட்டியது. கனமழை காரணமாக சென்னையில் மேக வெடிப்பு ஏற்பட்டதாகத் தகவல் பரவிய நிலையில், இதை வானிலை மையம் மறுத்துள்ளது. சென்னையில் வானிலை மையம் இல்லை என்றும் குறுகிய நேரத்தில் அதிக மழை மட்டுமே பெய்துள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.
சென்னையில் நேற்றிருவ தொடங்கிய கனமழை இரவு முழுவதும் கொட்டி தீர்த்தது. குறிப்பாக வடசென்னையின் பல பகுதிகளில் சில மணி நேரங்களிலேயே மிக அதிக அளவில் மழை பெய்ததால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
நேற்றைய தினம் இரவில் சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழை தீவிரமடைந்தது. பாரிமுனை, திருவொற்றியூர், பெரம்பூர், தண்டையார்பேட்டை, மணலி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. பல இடங்களில் 20 செமீ-க்கு மேல் மழை கொட்டி தீர்த்தது. காரைக்கால் நகர், சாத்தங்காடு மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தின் மாப்பேடு உள்ளிட்ட பகுதிகளிலும் ஒரு மணி நேரத்தில் அதிதீவிர மழை கொட்டி தீர்த்தது. இந்தளவுக்கு மழை கொட்டிய நிலையில், பொதுமக்கள் கடும் அதிருப்தி அடைந்தனர். வானிலை மையத்தில் இருந்து முறையான எச்சரிக்கை வராதது குறித்து நெட்டிசன்கள் பலரும் கேள்வி எழுப்பினர். அரசும் கூட மழை தொடர்பாக எந்தவொரு எச்சரிக்கையையும் விடுக்கவில்லை என அதிருப்தி அடைந்தனர். குறுகிய நேரத்தில் மிக அதிக அளவில் மழை பெய்ததால், சென்னையில் மேகவெடிப்பு ஏற்பட்டிருப்பதாக என்ற தகவல் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவியது. நெட்டிசன்கள் பலரும் இது தொடர்பாக தங்கள் கருத்துகளை பதிவிட்டனர். ஆனால், வானிலை மையம் இதனை மறுத்துள்ளது. சென்னையில் மேகவெடிப்பு ஏற்படவில்லை என்றும், குறுகிய நேரத்தில் தீவிரமான மழைப்பொழிவு மட்டுமே ஏற்பட்டதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை தீவிரமடைந்துள்ளது. சென்னையிலும் மழை தொடரும் வாய்ப்பு இருப்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மழைநீரை வெளியேற்றவும், மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்கவும் சென்னை மாநகராட்சி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. மேலும், அவர்களை தங்க வைத்து உணவுகளை வழங்கவும் தேவையான உதவி மையங்கள் தயார் நிலையில் உள்ளன. மழையால் பாதிக்கப்படும் மக்களுக்கு உணவு வழங்குவதற்காக ஆறு மையங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. புகார்களை பெற மாநகராட்சியின் கட்டுப்பாட்டு அறை 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது. உதவி தேவைப்படும் மக்கள் 1913 என்ற நம்பருக்கு கால் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவசர உதவி தேவைப்படு சென்னைவாசிகள் இந்த புகார் எண்களை தொடர்பு கொண்டு தங்களுக்கு தேவையான உதவிகளை பெறலாம். சென்னையில் கனமழை இன்றும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, மழைநீர் தேங்கியுள்ள சாலைகளில் தேவையின்றிப் பயணிப்பதைத் தவிர்க்க வேண்டும். நீரில் மூழ்கியுள்ள சாலைகள் மற்றும் சுரங்கப்பாதைகளில் செல்ல வேண்டாம். அறுந்து விழுந்த மின்கம்பிகள் அல்லது மின்சாதனங்களைத் தொடக்கூடாது. மழை தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை தொடர்ந்து கவனிக்க வேண்டும்.கொட்டிய கனமழை
மேகவெடிப்பு இல்லை
ஆத்தி.. எவ்வளவு பெரிய இடி சத்தம்.. மின்னலால் அதிர்ந்துபோன சென்னை.. வெள்ளத்தில் மிதந்த கிளாம்பாக்கம்!
எச்சரிக்கை
வாழ்க்கையில் இப்படியொரு மழையை! மீண்டும் வடசென்னை நோக்கி திரும்பும் மழை மேகங்கள்.. வெதர்மேன் வார்னிங்
கவனம்