சென்னை: சென்னையில் நேற்று மாலை முதல் விடிய விடிய பெய்த கனமழையால் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியது. இதையடுத்து மழைநீரை வெளியேற்றும் பணிகளில் மாநகராட்சி ஊழியர்கள் விடிய விடிய தீவிரமாக ஈடுபட்டனர். இந்நிலையில் இன்று காலை நிலவரப்படி சென்னையில் உள்ள அனைத்து சுரங்கப்பாதைகளிலும் போக்குவரத்து சீராக இருப்பதாகப் பெருநகர சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தொடங்கி பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதற்கிடையே சென்னையிலும் கடந்த 24 மணி நேரத்தில் பல இடங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. குறுகிய நேரத்தில் மிக தீவிர கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் சாலைகளில் மழைநீர் தேங்கிய நிலையில், அதை விரைந்து அகற்றி போக்குவரத்தை சீராக்கும் பணிகள் இரவு முழுவதும் நடைபெற்றன.
சென்னை மாநகராட்சியில் மொத்தம் 22 சுரங்கப்பாதைகள் உள்ளன. இன்று காலை நிலவரப்படி அவற்றில் 21 சுரங்க பாதைகளில் மழைநீர் தேங்கவில்லை என்றும் அனைத்து சுரங்க பாதைகளிலும் இன்று காலை 6 மணி நிலவரப்படி போக்குவரத்து சீராக இருப்பதாகவும் மாநகராட்சி தெரிவித்துள்ளது. நள்ளிரவில் பெய்த அதிகனமழையால் சில சுரங்க பாதைகளில் தண்ணீர் தேங்கியபோதும், இரவோடு இரவாக மழைநீர் அகற்றப்பட்டு போக்குவரத்து சீராக்கப்பட்டுள்ளது. கணேசபுரம் சுரங்கப்பாதையில் ஏற்கெனவே நடைபெற்று வரும் பால பராமரிப்புப் பணி தொடர்ந்து நடைபெறுகிறது. மற்ற சுரங்கப்பாதைகள் எல்லாம் மழை நீர் வெளியேற்றப்பட்டு சீர் செய்யப்பட்டுள்ளது. மழைநீர் தேக்கம் உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்படாமல் தடுப்பதற்காக, மாநகராட்சியின் ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு அறை மூலம் 24 மணி நேரமும் கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை பதிவாகியுள்ளது. வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலின்படி, பாரிமுனையில் அதிகபட்சமாக 36 செமீ மழை பதிவாகியுள்ளது. மீனம்பாக்கம், சென்டரல், சைதாப்பேட்டை, வடபழனி, நுங்கம்பாக்கம் என பல பகுதிகளிலும் விடிய விடிய கனமழை கொட்டியது. சென்னையின் பல்வேறு பகுதிகளில் தேங்கிய மழைநீர் மோட்டார்கள் மற்றும் பம்புகள் மூலம் அகற்றப்பட்டன. மணலி காமராஜர் சாலையில் தேங்கியிருந்த மழைநீர் அகற்றப்பட்டு, சாலை போக்குவரத்துக்கு ஏற்ற வகையில் சீராக்கப்பட்டுள்ளது. அதேபோல் பிரகாசம் சாலையில் தேங்கியிருந்த மழைநீரும் மாநகராட்சி ஊழியர்களால் முழுமையாக அகற்றப்பட்டது. தண்டையார்பேட்டை மண்டலத்தில் உள்ள கூட்ஸ் ஷெட் குளம் பகுதியில் மோட்டர் நிறுவப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையைத் தொடர்ந்து, பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ரிப்பன் கட்டட அலுவலகத்துக்கு சென்றார். நள்ளிரவில் கட்டுப்பாட்டு அறைக்கு சென்ற அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அங்கு ஆய்வு மேற்கொண்டார். மேலும், மேற்கொள்ள வேண்டிய மீட்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தி அறிவுரைகளை வழங்கினார். பொதுமக்கள் பதற வேண்டாம் எனவும் எதாவது சிக்கல் ஏற்பட்டால் 1913 என்ற நம்பரில் புகார் அளிக்கலாம் எனவும் தெரிவித்தார். வரும் 20ம் தேதி வரை சென்னையில் பல பகுதிகளிலும் மழை கொட்டி தீர்க்கும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் மக்கள் கவனமாக இருக்கும்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.21 சுரங்கப்பாதைகள்
கொட்டி தீர்த்த கனமழை.. சென்னை மக்கள் பதற வேண்டாம்.! ஆதவ் அர்ஜுனா சொன்ன முக்கிய தகவல்
கொட்டிய கனமழை
மோட்டர் பம்புகள்
"இவ்வளவு மழை இருக்கும்னு நாங்களே எதிர்பார்க்கல.." அடுத்து சென்னை ஆணையர் சொன்ன மிக முக்கிய தகவல்
ஆய்வு