Rain: ஹாட்ஸ்பாட்டாகும் சென்னை! அக். 17, 18, 21, 22-ல் வெளுக்க போகும் மழை! வெதர்மேன் சொன்ன அப்டேட்

  • சென்னை: அக்டோபர் 17, 18, 21, 22 ஆகிய தேதிகளில் சென்னையில் நல்ல மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தமிழ்நாடு வெதர்மேனும், தமிழக அரசின் எல்நினோ ஆய்வு குழு உறுப்பினருமான பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

    Advertisement

    இதுகுறித்து அவர் தனது எக்ஸ்வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: அக்டோபர் 17- 18, அக்டோபர் 21- 22 ஆகிய நாட்களில் மிக கனமழைக்கு வாய்ப்பிருக்கிறது. இதனால் சென்னை மழைக்கான ஹாட்ஸ்பாட்டாகும்.

    Advertisement

    பகல் நேரத்தில் வெயில் இருக்கும். அதே வேளையில் எதிர்பாராதவிதமாக திடீரென கனமழை பெய்யக் கூடும். கடற்கரையையொட்டிய பகுதிகளில் இரவு, அதிகாலை வேளைகளில் மழை தீவிரமாக இருக்கும். சென்னை, அதன் புறநகர் பகுதிகள், காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய பகுதிகளில் மழை பொழிவு தொடர்ந்து நீடிக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

    அது போல் வெதர்மேன் மற்றொரு பதிவில் சென்னைக்கு குடிநீரை கொடுக்கும் ஏரிகளின் இருப்பு குறித்த இன்று காலை 6 மணி நிலவரத்தை தெரிவித்துள்ளார்.

    ரெட்டேரி

    ரெட்டேரியின் மொத்தம் ஆழம் 21.20 அடியாகும். அதில் தற்போது 14.30 அடிக்கு தண்ணீர் இருக்கிறது. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 3.300 டிஎம்சியாகும். தற்போது 1,926 டிஎம்சி தண்ணீர் இருக்கிறது. 663 கனஅடி நீர் வரத்து வருகிறது. 199 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. இங்கு மழையின் அளவு 38 மி.மீ. ஆகும்.

    Advertisement

    சோழவரம்

    சோழவரம் ஏரியின் மொத்தம் ஆழம் 18.86 அடியாகும். அதில் தற்போது 2.63 அடிக்கு தண்ணீர் இருக்கிறது. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 1.081 டிஎம்சியாகும். தற்போது 0.122 டிஎம்சி தண்ணீர் இருக்கிறது. நீர் வரத்து 30 கனஅடியாக உள்ளது. ஆனால் 8 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. நேற்று பெய்த மழையின் அளவு 45 மி.மீ. ஆகும்.

    செம்பரம்பாக்கம்

    செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்தம் ஆழம் 24 அடியாகும். அதில் தற்போது 13.99 அடிக்கு தண்ணீர் இருக்கிறது. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 3.645 டிஎம்சியாகும். தற்போது 1,351 டிஎம்சி தண்ணீர் இருக்கிறது. 576 கனஅடி நீர் வரத்து வருகிறது. 223 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. நேற்று பெய்த மழையின் அளவு 17 மி.மீ. ஆகும்.

    Advertisement

    பூண்டி

    பூண்டி ஏரியின் மொத்தம் ஆழம் 35 அடியாகும். அதில் தற்போது 21.12 அடிக்கு தண்ணீர் இருக்கிறது. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 3.231 டிஎம்சியாகும். தற்போது 0.358 டிஎம்சி தண்ணீர் இருக்கிறது. 290 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. 530 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. மழையின் அளவு 9 மி.மீ. ஆகும்.

    வீராணம்

    வீராணம் ஏரியின் மொத்தம் ஆழம் 15.60 அடியாகும். அதில் தற்போது 11.36 அடிக்கு தண்ணீர் இருக்கிறது. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 1.465 டிஎம்சியாகும். தற்போது 0.550 டிஎம்சி தண்ணீர் இருக்கிறது. 340 கனஅடி நீர் வரத்து வருகிறது. 159 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. இங்கு மழைப் பதிவு இல்லை.

    Advertisement

    கண்ணன்கோட்டை

    கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரியின் மொத்தம் ஆழம் 36.61 அடியாகும். அதில் தற்போது 27.81 அடிக்கு தண்ணீர் இருக்கிறது. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 0.500 டிஎம்சியாகும். தற்போது 0.232 டிஎம்சி தண்ணீர் இருக்கிறது. 20 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. 18 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. இங்கு மழையின் அளவு 36 மி.மீ. என பதிவாகியுள்ளது.

    ஆக, மொத்தம் இந்த 6 ஏரிகளின் மொத்த கொள்ளளவு 13.222 டிஎம்சி. அதில் 4.539 டிஎம்சி தண்ணீர் இருப்பு இருக்கிறது. அதாவது மொத்த கொள்ளளவில் 34.3 சதவீதம் நீர் இருப்பு உள்ளது. இவ்வாறு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

    English Summary

    Tamil nadu Weatherman Pradeep John predicts that Chennai will be the hot spot for rain on oct 17, 18, 21, 22 as North East Monsoon intensfies.