தமிழகத்தில் இன்று 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்! 14 மாவட்டங்களுக்கு மஞ்சள்! சென்னைக்கு என்ன?

  • சென்னை: தேனி, திண்டுக்கல் ,மதுரை ஆகிய 3 மாவட்டங்களில் இன்று அதி கனமழை பெய்யும் என்பதால் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அது போல் 14 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்பதால் ஆரஞ்ச் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் வங்கக் கடலிலும், அரபிக் கடலிலும் காற்றழுத்தம் ஏற்பட்டு அதில் வங்கக் கடலில் புயல் உருவாகியுள்ளது. இதனால் கடந்த சில தினங்களாக தமிழகத்தில் மழை பரவலாக பெய்து வருகிறது.

    Advertisement

    இந்த நிலையில் நீலகிரி மாவட்டத்தில் குன்னூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்ததால் பர்லியார் உள்ளிட்ட 22 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் சாலைகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. எனவே அங்கு நீலகிரி மாவட்டத்திற்கு 3 நாட்களுக்கு யாரும் சுற்றுலா வர வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

    இந்த நிலையில் தமிழகத்தில் வரும் 30-ஆம் தேதி வரை மழை இருக்கும் என சொல்லப்படுகிறது. இதுகுறித்து வானிலை மையம் கூறியிருப்பதாவது: வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று காலை 5.30 மணி அளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மேலும் வலுப்பெற்றது.

    Advertisement

    இதனால் தமிழகம் மற்றும் புதுவையில் வரும் 30-ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளது. தமிழகத்தில் இன்று 3 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    தேனி, திண்டுக்கல், மதுரை ஆகிய மாவட்டங்களில் இன்று அதி கனமழை பெய்வதற்கு வாய்ப்புள்ளது. மேலும் 14 மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    அந்த வகையில் கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, கரூர், நீலகிரி, கோவை, திருப்பூர் மற்றும் சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்வதற்கான வாய்ப்புள்ளது.

    Advertisement

    17 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சீபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, விருதுநகர் மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    English Summary

    Theni, Dindigul and Madurai receives very heavy rainfall, so the chennai meteorological department issues red alert.