விடிஞ்சா திங்கட்கிழமை.. சென்னையில் மழை கொட்டுமா? வானிலை மையம் விளக்கம்!

  • சென்னை: கடந்த ஒரு வாரமாக சென்னையில் ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது. இப்படி இருக்கையில் இன்று (ஆக.10) சென்னையில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறதா? என்பது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் விளக்கமளித்திருக்கிறது.

    Advertisement

    கடந்த ஜூன் 1ம் தேதி தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. அப்போது முதல் நேற்று வரை, மொத்தமாக இயல்பை விட 13% குறைவாகவே தமிழகத்தில் மழை பெய்திருக்கிறது. இந்த காலத்தில் 140.4 மி.மீ அளவுக்கு மழை பெய்திருக்க வேண்டும். ஆனால், 122.2 மி.மீ அளவுக்கு மழை பெய்திருக்கிறது.

    Advertisement

    இந்நிலையில், சுமார் 5.8 கிமீ உயரத்தில் வட கடலோர தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இது கொஞ்சம் மழையை கொடுக்க வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

    தாகத்தில் தவிக்கும் நேரத்தில்.. தொண்டையை நனைத்து செல்லும் நீராக.. லேசாக சென்னையில் பரவலாக கடந்த ஒரு வாரமாக மழை பெய்து வருகிறது. இது வெப்பச்சலன மழைதான். அடுத்த ஒரு வாரத்தை பொறுத்தவரை, "இன்று (10-08-2026) தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    Advertisement

    11-08-2026: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    12-08-2026 மற்றும் 13-08-2026: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும், ஏனைய தமிழகம், மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    14-08-2026: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    15-08-2026 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

    Advertisement

    சென்னை வானிலை

    இன்று (10-08-2026) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27" செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்" என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

    English Summary

    Chennai Monday Weather: It has been raining in a few places in Chennai for the past one week. If this is the case, is there a chance of rain in Chennai today (August 10)? The Chennai Meteorological Center has given an explanation.