அதிகாலையில் வந்த அலர்ட்.. சென்னை உட்பட 23 மாவட்டங்களில் சம்பவம்.. 3 மணி நேரத்திற்கு மழை வெளுக்கும்!

  • சென்னை: சென்னையில் சனிக்கிழமை இரவு பெய்த வரலாறு காணாத கனமழையால் பல்வேறு பகுதிகளில் வெள்ளநீர் தேங்கிய நிலையில், இன்று காலை 10 மணி வரை சென்னை உள்ளிட்ட 23 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் என மொத்தம் 23 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    இப்போது தான் நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. நாட்டின் பெரும்பாலான பகுதிகளுக்கு தென்மேற்கு பருவமழை மூலமாகவே மழை கிடைக்கும். ஆனால், தமிழ்நாட்டிற்கு மட்டும் வடகிழக்கு பருவமழை மூலமாகவே அதிக மழை கிடைக்கும். இந்தாண்டு தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்த அளவுக்கு பெய்யாத நிலையில், வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் என்பதில் எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

    Advertisement

    வடகிழக்கு பருவமழை

    வடகிழக்கு பருவமழை தொடங்கிய முதல் இரண்டு நாட்களிலேயே சென்னையில் கனமழை வெளுத்து வாங்கியது. கடந்த சனிக்கிழமை இரவு சென்னையின் வடக்கு பகுதிகளில் மிக கனமழை கொட்டி தீர்த்தது. பாரிமுனை பகுதியில் சுமார் 36.34 செ.மீ. மழை பதிவானது. கத்திவாக்கம் பகுதியில் 34 செ.மீ.க்கும் அதிகமான மழை பதிவானது. சில பகுதிகளில் மிக குறுகிய நேரத்தில் அதிக அளவில் மழை பெய்ததால் சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியது.

    சிலர் இதை மேக வெடிப்பு என் சொன்னாலும் கூட வானிலை மையம் இதை மறுத்தே வருகிறது. சென்னையில் சராசரியாக சுமார் 11 செ.மீ. மழை பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பட்டாளம், வியாசர்பாடி, வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை வெளுத்தது. இருப்பினும், கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட மழைநீர் வடிகால் பணிகள் காரணமாக பெரும்பாலான இடங்களில் ஓவர்நைட்டில் மழை நீர் வடிந்தது.

    Advertisement

    23 மாவட்டங்கள்

    இதற்கிடையே வானிலை மையம் இப்போது புதிதாக ஒரு அலர்ட் வெளியிட்டுள்ளது. அதில் காலை 10 மணி வரை 23 மாவட்டங்களில் மழை வெளுக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையுடன் இடியுடன் கூடிய மழை மற்றும் மின்னல் ஏற்பட வாய்ப்புள்ளது.

    மேலும் கடலூர், கன்னியாகுமரி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், தூத்துக்குடி, திருநெல்வேலி, விழுப்புரம், கோயம்புத்தூர், திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, தென்காசி, தேனி, நீலகிரி, திருப்பூர், விருதுநகர் மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    வெளுத்து வாங்கிய மழை

    வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னையில் அக்டோபர் 21ஆம் தேதி வரை கனமழை முதல் மிகக் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் அக்டோபர் 24ஆம் தேதி வரை மழை நீடிக்க வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நடவடிக்கை

    தொடர் மழையை முன்னிட்டு சென்னையில் வெள்ள அபாயம் உள்ள இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன என்றும் நிவாரண மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.. மழைநீர் தேங்கும் பகுதிகளில் வசிப்போர் எச்சரிக்கையுடன் இருக்கவும், இடியுடன் கூடிய மழை பெய்யும்போது திறந்தவெளிகளில் நிற்பதை தவிர்க்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள். நேற்றைய தினம் பொதுமக்களுக்கு செல்போன் மூலம் நேரடியாக கனமழை குறித்த எச்சரிக்கையும் அனுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    English Summary

    Chennai recorded exceptionally heavy rainfall on Saturday night(சென்னையில் கொட்டி தீர்த்த கனமழை): Chennai Rain Alert latest news in tamil.