சென்னை: நேற்று சென்னையில் பரவலாக கனமழை பெய்திருக்கிறது. குறிப்பாக ராயபுரம், சைதாப்பேட்டை என 30க்கும் மேற்பட்ட இடங்களில் 10 செ.மீக்கும் அதிகமாக மழை பெய்திருக்கிறது.
அதிகபட்சமாக பாரிமுனை பகுதியில் 35.45 செ.மீ, கத்திவாக்கத்தில் 33.42 செ.மீ அளவுக்கு மழை பெய்திருக்கிறது. சென்னையில் பதிவான அதிகபட்ச மழை இதுவாகும்.
அதேபோல சாத்தாங்காடு பகுதியில் 25.36 செ.மீ, திருவொற்றியூரில் 21.81 செ.மீ, எண்ணூரில் 20.8 செ.மீ அளவுக்கு மழை பதிவாகியிருக்கிறது. கார்கில் நகர் - 18.68 செ.மீ என சென்னை முழுவதும் மழை பரவலாக பதிவாகியிருக்கிறது. பொதுவாக வடகிழக்கு பருவமழை, வட கடலோர மாவட்டங்களுக்கு நல்ல மழையை கொடுக்கும். அதே சமயம் எல்-நினோ ஆண்டாக இருந்தால், வடகிழக்கு பருவமழை தீவிரமாக இருக்கும். இந்த ஆண்டு எல்-நினோ ஆண்டு என்பதால் மழையின் தாக்கம் அதிகமாக இருப்பதாக வானிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
சிமெட்ரி ரோடு - 17.44 செ.மீ
சைதாப்பேட்டை - 16.62 செ.மீ
தண்டையார்பேட்டை - 16.44 செ.மீ
Z 04 தண்டையார்பேட்டை - 15.93 செ.மீ
வடபழனி - 15.81 செ.மீ
கொளபாக்கம் - 15.76 செ.மீ
வேப்பேரி - 15 செ.மீ
பேசின் பிரிட்ஜ் - 14.91 செ.மீ
நுங்கம்பாக்கம் - 14.61 செ.மீ
புதுப்பேட்டை - 13.74 செ.மீ
ஆலந்தூர் - 13.42 செ.மீ
எழும்பூர் - 13.66 செ.மீ
ஐஸ் ஹவுஸ் - 13.322023ம் ஆண்டுக்கு பிறகு சென்னையில் கொட்டி தீர்த்த பெரிய மழை! என்ன நடந்தது நேற்று? வெதர்மேன் விளக்கம்