சென்னையில் டமால் டுமீல்.. கொட்டி தீர்க்கும் கனமழை! உஷார் மக்களே!

  • சென்னை: தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வெப்ப அலை வீசி வருகிறது. இதற்கிடையில் சென்னையில் பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது. வெயிலுக்கு நடுவே வந்த இந்த திடீர் மழை மக்களை சற்று ஆசுவாசப்படுத்தியிருக்கிறது.

    Advertisement

    மழை குறித்து ஏற்கெனவே சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இன்று மதியம் வெளியான இந்த அறிவிப்பில், "சென்னையில் இன்று (17-07-2026) மற்றும் நாளை (18-07-2026) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

    Advertisement

    மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37-38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29" செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    அடுத்த 7 நாட்களை பொறுத்தவரை, 17-07-2026 மற்றும் 18-07-2026: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வடக்கு கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.

    Advertisement

    19-07-2026: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.

    20-07-2026 மற்றும் 21-07-2026: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.

    Advertisement

    22-07-2026 மற்றும் 23-07-2026: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும்" என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    English Summary

    Chennai Rain Update: Heatwave conditions are prevailing across various parts of Tamil Nadu. Meanwhile, widespread heavy rain is lashing Chennai. This sudden rainfall, arriving amidst the scorching heat, has brought some relief to the people.