வேளச்சேரியில் வெளுக்கும் மழை.. தி.நகரில் வெயில்! என்னங்க இது.. வெதர்மேன் கொடுத்த வார்னிங்

  • சென்னை: தமிழகத்தில் எதிர்பார்த்த அளவுக்கு தென்மேற்கு பருவமழை பெய்யவில்லை. இருப்பினும், சென்னையில் இன்று மழை மற்றும் வெயிலுக்கு வாய்ப்பு இருக்கிறது தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்திருக்கிறார்.

    Advertisement

    இது குறித்து அவர் தனது x பக்கத்தில், "சென்னையின் சில பகுதிகளில் இன்றும் தினசரி மழை தொடரும். ஒரு பகுதி முற்றிலும் வறண்ட நிலையில் இருக்கக்கூடும்; அதேவேளையில், அங்கிருந்து சில கிலோமீட்டர் தொலைவில் உள்ள மற்றொரு பகுதியில் திடீரெனத் தீவிரமான, வேகமான மழை பெய்யக்கூடும்" என தெரிவித்திருக்கிறார்.

    Advertisement

    அதாவது, சென்னையின் புறநகர் பகுதியான வேளச்சேரி, தாம்பரம், ஜஎஸ்டி சாலை, வண்டலூர், கிளாம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மழை வெளுக்கும். அதேபோல சென்னையின் நகர் பகுதிகளான தி.நகர், வடபழனி, கோயம்பேடு, வில்லிவாக்கம், அயனாவரம், சென்டரல் உள்ளிட்ட பகுதிகளில் வெயில் வெளுக்கும் என்று தெரிவித்திருக்கிறார்.

    முன்னதாக இன்று மதியம் வெளியிட்டிருந்த வானிலை அறிவிப்பில், "சுமார் 5.8 கிமீ உயரத்தில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் முதல் வடக்கு கடலோர கேரளா வரை தமிழகம் வழியாக ஒரு பலவீனமான காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது. வட தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை (Trough) நிலவுகிறது.

    Advertisement

    07-08-2026: கோயம்புத்தூர், தேனி மாவட்டங்களின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும். இதர மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.

    Advertisement

    08-08-2026: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழையும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.

    09-08-2026: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

    Advertisement

    10-08-2026 முதல் 12-08-2026 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    13-08-2026: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

    சென்னை வானிலை

    இன்று (07-08-2026) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    Advertisement

    நாளை (08-08-2026) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்" என தெரிவிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    English Summary

    Chennai Rains: The Southwest monsoon rainfall in Tamil Nadu has not met expectations. However, 'Tamil Nadu Weatherman' Pradeep John has stated that there is a possibility of both rain and sunshine in Chennai today.