தலைக்கு மேல் தொங்கும் கத்தி! சென்னைக்கு இன்னைக்கு பெரிய சம்பவம் இருக்கு.. வெதர்மேன் வார்னிங்!

  • சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்க்கப்பட்டதைவிட ஒரு நாள் முன்கூட்டியே தொடங்கியிருக்கிறது. இந்நிலையில் இன்று சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் மழையின் தாக்கம் தீவிரமாக இருக்கும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியிருக்கிறார்.

    Advertisement

    இது குறித்து அவர் தனது x பக்கத்தில், "இன்று வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி சென்னைக்கு அருகில் நிலவுவதால், காற்று வட தமிழகத்தின் உட்பகுதிகளை நோக்கி வீசுகிறது. இதனால் நேற்று மேற்கு மற்றும் தென் தமிழகத்தில் மழை பெய்தது போல.. இன்று வட தமிழகத்தில் மழைக்கான சூழல் நிலவுகிறது.

    Advertisement

    தமிழகத்தின் உட்பகுதிகளிலும் இன்று மிகச்சிறந்த மழைப்பொழிவு இருக்கும். சென்னையை சுற்றி உள்ள ஏரிகளின் நீர் பிடிப்பு பகுதிகளில் நல்ல மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. இந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, சென்னையின் மீது நேரடியாக இருப்பதால் காற்று ஒருமைவு நிகழ்வு சென்னையை சுற்றியுள்ள மாவட்டங்களில் காணப்படுகிறது. இதனால் சென்னையில் அவ்வப்போது திடீர் மழை பெய்யக்கூடும். மிக முக்கியமான விஷயம் என்னவென்றால்.. ஏரி பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்பது தான்" என்று வெதர்மேன் கூறி இருக்கிறார்.

    இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் ராணிப்பேட்டை போன்ற வட மாவட்டங்களின் உட்பகுதிகளில் மிகச் சிறப்பான மழைக்கு வாய்ப்புள்ளது. மேலடுக்கு சுழற்சி சரியாக சென்னைக்கு மிக அருகில் அல்லது சென்னைக்கு நேர்மையிலே நிலை கொண்டுள்ளது. வானிலை விதிகளின்படி சுழற்சி மையத்தின் மையப் பகுதியை விட.. அதை சுற்றியுள்ள வெளிக்காற்று மண்டலத்தில் தான் மேகங்கள் குவிந்து பலத்த மழை பெய்யும். எனவே சென்னைக்கு அருகில் மழை தீவிரமாக இருக்கும். ஆனால், சென்னை நகருக்குள் பெரியளவுக்கு மழை இருக்காது.

    Advertisement

    சென்னைக்கு மழை குறைவாக இருந்தாலும்.. குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் முக்கிய ஏரிகளின் நீர் பிடிப்பு பகுதிகளில் நல்ல மழை பெய்யும் என வானிலை ஆர்வலர்கள் கூறியிருக்கின்றனர்.

    English Summary

    Chennai Rains: The Northeast monsoon has arrived in Tamil Nadu a day earlier than expected. In this context, 'Tamil Nadu Weatherman' Pradeep John has stated that the impact of the rain is set to be intense today in Chennai and its surrounding districts.