2023ம் ஆண்டுக்கு பிறகு சென்னையில் கொட்டி தீர்த்த பெரிய மழை! என்ன நடந்தது நேற்று? வெதர்மேன் விளக்கம்

  • சென்னை: நேற்றிரவு சென்னையில் பரவலாக கனமழை பெய்திருந்தது. குறிப்பாக திருவொற்றியூர், எண்ணூர் போன்ற இடங்களில் கனமழை காரணமாக வெள்ளம் ஏற்பட்டது. இந்த பாதிப்பு குறித்து விளக்கமளித்துள்ள தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான், கடந்த 2023ம் ஆண்டு டிசம்பருக்கு பிறகு சென்னையில் பதிவாகும் பெரிய மழை இது என்று கூறியிருக்கிறார்.

    Advertisement

    இது குறித்து அவர் மேலும் கூறியதாவது, "நேற்றிரவு தொடங்கி இன்று அதிகாலை 1.30 மணி வரை மழை பதிவாகியிருக்கிறது. இது கடந்த 2023ம் ஆண்டு டிசம்பர் மாதம் பெய்த மழை போன்று மிக அதிக மழையாகும். 2023ம் ஆண்டு டிசம்பரில் மிக்சாங் புயலின் போது ஒரே நாளில் சுமார் 400-450 மி.மீ வரை மழை பெய்திருந்தது. அதற்கு பிறகு சென்னை பார்த்த மிக அதிக அளிவலான மழை நேற்று பெய்ததுதான்.

    Advertisement

    சுமார் 25 நாட்களாக மழை ஏதுமின்றி வறண்ட வானிலை நிலவிய நிலையில், வடகிழக்கு பருவமழையின் தொடக்கத்துடன் இந்த மழை பொழிந்திருப்பது இந்த நிகழ்வை இன்னும் சிறப்பானதாக்குகிறது. இந்த மழை குறிப்பிடத்தக்கதாக இருக்கும். இன்றும் மழையின் தாக்கம் நீடிக்கும்" என்று தனது x பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

    நேற்றிரவ சென்னையில் 30க்கும் மேற்பட்ட இடங்களில் 10 செ.மீக்கும் அதிகமாக மழை பதிவாகியிருக்கிறது. குறிப்பாக ராயபுரத்தில் 17.4 செ.மீ, சைதாப்பேட்டை 16.6 செ.மீ அளவுக்கு மழை பெய்திருக்கிறது.

    இன்று வானிலை எப்படி இருக்கும்?

    வழக்கமாக எல்-நினோ ஆண்டுகளில் வடகிழக்கு பருவமழையின் தாக்கம் அதிகமாக இருக்கும். இது வட கடலோர மாவட்டங்களை பாதிக்கும். அந்த வகையில் இந்த ஆண்டும் மழையின் தாக்கம் அதிகமாக இருக்கிறது.

    Advertisement

    சென்னை மட்டுமல்லாது திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை என சென்னையை ஒட்டியுள்ள மாவட்டங்களிலும் மழை பதிவாகியிருக்கிறது. மேலும் திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், மயிலாடுதுறை போன்ற டெல்டா மாவட்டங்களிலும் மழை வெளுத்து வாங்கியிருக்கிறது. மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் தாமதமாக திறக்கப்பட்டதால், காவிரி நீர் இப்போதுதான் கடைமடையை வந்தடைந்திருக்கிறது. வயல்களில் தண்ணீரை தேங்கி நெல் தெளிக்க விவசாயிகள் தயாராகியுள்ளனர். இந்த நேரத்தில் மழையின் தாக்கம் அதிகமாக இருப்பதால், விவசாயிகள் லேசாக அச்சமடைந்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    English Summary

    Chennai rain: Heavy rain fell across Chennai last night. Areas such as Thiruvottiyur and Ennore, in particular, experienced flooding due to the downpour. Commenting on the situation, 'Tamil Nadu Weatherman' Pradeep John stated that this is the most significant rainfall recorded in Chennai since December 2023.