சென்னையில் இடி, மின்னலுடன் கொட்டப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்!


  • சென்னை: சென்னை உட்பட 16 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்தில் இடி, மின்னலுடன் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

    Advertisement

    இது குறித்த வெளியான வானிலை அறிவிப்பில் சென்னை, செங்கல்பட்டு, கோயம்புத்தூர், திண்டுக்கல், காஞ்சிபுரம், கன்னியாகுமரி, மதுரை, ராணிப்பேட்டை, சேலம், தென்காசி, தேனி, நீலகிரி, திருவள்ளூர், திருநெல்வேலி, திருப்பூர் மற்றும் விருதுநகரில் இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

    Advertisement

    இந்த 16 மாவட்டங்களுக்கு அடுத்த 2 மணி நேரத்திற்கு மஞ்சள் அலர்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது. தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால் மக்கள் சற்று நிம்மதியடைந்திருக்கிறார்கள்.

    English Summary

    Chennai Thunderstorm Alert: The Chennai Regional Meteorological Centre has warned that rain accompanied by thunder and lightning will occur in 16 districts, including Chennai, over the next two hours.