Cyclone: அடுத்த வாரம் வங்கக் கடலில் உருவாகும் புயல்! எங்கே கரையை கடக்கும்? வானிலை ஆய்வாளர் கணிப்பு

  • சென்னை: வங்கக் கடலில் அடுத்த வாரம் உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, புயலாக மாறினால் எங்கு கரையை கடக்க வாய்ப்பிருக்கிறது என்பது குறித்து Chennai Weather- Raja எனும் சமூகவலைதள பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    Advertisement

    இதுகுறித்து அந்த ட்வீட்டில் கூறியிருப்பதாவது: அடுத்த வாரம் வங்கக் கடலில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. இது ஆழ்ந்த காற்றழுத்தமாக வலுப்பெற்று புயலாக மாறும் வாய்ப்பு உள்ளது.

    Advertisement

    அப்படி புயலாக மாறும்பட்சத்தில் இது இந்தியாவின் கிழக்கு கடற்கரை பகுதியை நோக்கி செல்லும். அவ்வாறு செல்லும் போது எங்கே கரையை கடக்கும் என்பதை பார்க்கலாம்.

    வடக்கு ஆந்திராவில் கரையை கடக்க 60 சதவீதம் வாய்ப்புள்ளது. ஒடிஸாவில் 20 சதவீதமும், வங்கதேசம் அல்லது மேற்கு வங்கத்தில் 10 சதவீதமும் தெற்கு ஆந்திராவில் 8 சதவீதமும் கரையை கடக்க வாய்ப்புள்ளதாம்.

    அது போல் வடக்கு தமிழகத்தில் கரையை கடக்கும் வாய்ப்பு வெறும் 2 சதவீதம் மட்டுமே இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் வானிலை என்பது மாறுதலுக்குள்பட்டது என்பதால் இங்குதான் கரையை கடக்கும் என்பதை உறுதியாக சொல்ல முடியாது என்றும் அந்த ட்வீட்டில் தெரிவிக்கப்பட்டது.

    Advertisement

    இந்த ட்வீட்டிற்கு பலரும் ஐய்யோ புயல் உருவாக போகிறதா, அது எல்லா ஈரப்பதத்தையும் உறிஞ்சி எடுத்துக் கொண்டு அடுத்த 15 நாட்களுக்கு சென்னை உள்பட தமிழகத்திற்கு குறைவான அளவு மழையையே கொடுக்கும் என்கிறார்கள்.

    தமிழகத்தில் கடந்த அக்டோபர் 15 ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது என வானிலை மையம் தெரிவித்திருந்தது. இதனால் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை வரை பரவலாக பெய்து வருகிறது. சில மாவட்டங்களில் பருவமழை தீவிரமடைந்துள்ளது.

    கொஞ்ச நேரத்தில் பிச்சு உதறப் போது மழை! சென்னை தான் ஹாட்ஸ்பாட்டே! வானிலை ஆய்வு மையம் கொடுத்த வார்னிங்
    Advertisement

    இந்த நிலையில் தென்மேற்கு அரபிக் கடலில் நிலவி வந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி அதே பகுதியில் தொடர்ந்து நிலை கொண்டுள்ளது. இது அடுத்த 12 மணி நேரத்தில் மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக வலுவிழந்து அக்டோபர் 22 ஆம் தேதி சோமாலியா கடற்கரை நோக்கி நகரும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    கூடுதலாக அக்டோபர் 23 ஆம் தேதி தென்கிழக்கு, அதையொட்டிய கிழக்கு மத்திய வங்கக் கடல் பகுதியில் புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    வடகிழக்கு பருவமழை சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. கடந்த இரு தினங்களுக்கு முன்பு சென்னையில் பெய்த அதி கனமழையால் ஆங்காங்கே தண்ணீர் தேங்கியது. அன்றைய தினம் ஒரே நாள் இரவில் 300 மி.மீ. மழை பதிவாகியிருந்தது.

    எனினும் அடுத்த நாள் சாலைகளில் தேங்கியிருந்த தண்ணீர் மோட்டார் மூலம் வெளியேற்றப்பட்டிருந்தது. இதற்கு திமுக ஆட்சியில் அமைக்கப்பட்ட மழைநீர் வடிகால்தான் காரணம் என திமுகவினர் பெருமிதம் பொங்க கூறி வருகிறார்கள். இந்த வடிகால் அமைப்பிற்காக திமுக ஆட்சியில் ரூ 4000 கோடி செலவிடப்பட்டது. இதுதான் அன்று பெய்த மழைக்கும், இனி பெய்ய போகும் மழைக்கும் கை கொடுத்தது என சொல்லலாம்.

    English Summary

    Chennai Weather blogger predicts about the landfall of cyclone which will form in Bay of Bengal next week. It will landfall in North AP probably.wea