மழையெல்லாம் முடிஞ்சது! ஒரு வாரத்திற்கு.. சுட்டெரிக்கும் சூரியன்! வானிலை மையம் கொடுத்த அப்டேட்

  • சென்னை: கடந்த 2 வாரங்களாக தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்நிலையில், இன்று தொடங்கி அடுத்த ஒரு வாரத்திற்கு பெரிய அளவுக்கு மழை இருக்காது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

    Advertisement

    இது குறித்து விடுக்கப்பட்டிருக்கும் அறிவிப்பில், "நேற்று (27-10-26) மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய மிக தீவிர புயல் (அர்னாப்) (Very Severe Cyclonic Storm) வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று (28-10-26) அதிகாலை 0200 மணி முதல் காலை 0800 மணி வரையிலான இடைப்பட்ட நேரத்தில் ஆந்திரப்பிரதேசம் மற்றும் ஏனாம் (Yanam) கடற்கரைப் பகுதிகளில், பாபட்லா (Bapatla) மற்றும் விசாகப்பட்டினம் (Visakhapatnam) இடையே கரையை கடந்தது. இது மேலும் வடமேற்கு திசையில் நகர்ந்து வலுவிழந்து தீவிர புயலாக (அர்னாப்) (Severe Cyclonic Storm) காலை 0830 மணி அளவில் ஆந்திரப்பிரதேசம், ஏனாம் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவுகிறது. இது மேலும் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 06 மணி நேரத்தில் புயலாக வலுவிழக்கக்கூடும்.

    Advertisement

    சுமார் 5.8 கிமீ உயரம் வரை தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி அதே பகுதிகளில் உருவாகக்கூடும்.

    28-10-2026 முதல் 30-10-2026 வரை: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

    Advertisement

    31-10-2026: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

    01-11-2026: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    02-11-2026: வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்யக்கூடும். தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    03-11-2026: திருவள்ளூர் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யக்கூடும். வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்யக்கூடும். தென் தமிழகத்தில் ஒரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    Advertisement

    சென்னை வானிலை

    இன்று (28-10-2026) மற்றும் நாளை (29-10-2026) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34-35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

    English Summary

    Over the past two weeks, the impact of the Northeast monsoon has been significant in Tamil Nadu. Meanwhile, the Chennai Meteorological Centre has indicated that there will not be any substantial rainfall for the next week, starting today.