சென்னை: தமிழகம் முழுவதும் பரவலாக மழை பதிவாகி வருகிறது. இந்நிலையில் இரவு 1 மணி வரை சென்னை உட்பட 22 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இது குறித்து விடுக்கப்பட்டிருக்கும் அறிவிப்பில்.. "கோயம்பத்தூர், நீலகிரி, செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், கரூர், மதுரை, நாமக்கல், ராமநாதபுரம், சேலம், தென்காசி, தேனி, திருச்சி, திருநெல்வேலி, திருப்பூர், திருவண்ணாமலை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
அதேபோல இன்று மதியம் வெளியாகியிருந்த வானிலை அறிவிப்பில், தீபாவளியான நாளை.. தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை, ஈரோடு, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.