சுத்துப்போட்ட மழை மேகங்கள்.. சென்னையில் பெரிய சம்பவம் இருக்கு! வானிலை அலர்ட்!

  • சென்னை: தமிழ்நாட்டில் தற்போது தென்மேற்கு பருவமழை கொஞ்சம் கொஞ்சமாக வலுவடைய தொடங்கியிருக்கிறது. இந்நிலையில் இன்று புறநகர் சென்னையில் பலத்த மழைக்கு வாய்ப்பு இருக்கிறது என்று தனியார் வானிலை ஆய்வாளர்கள் தெரிவிருக்கின்றனர்.

    Advertisement

    அதாவது, சென்னையின் மேற்கு மற்றும் வடமேற்கு திசைகளில் தற்போதைய சூழலில் இடி மின்னலுடன் கூடிய மழை மேகங்கள் சூழந்திருக்கின்றன. இந்த மலை மேகங்களை நகர்த்தி செல்லும் காற்றின் வேகம் அல்லது திசை தற்போது மிகவும் பலவீனமாக உள்ளது.

    Advertisement

    இதன் காரணமாக இந்த மேகங்கள் சென்னை நகருக்குள் வேகமாக நுழைவதற்கான வாய்ப்புகள் தற்போதைக்கு குறைவாகவே காணப்படுகின்றன. இருப்பினும் சென்னையின் வடக்கு புறநகர் பகுதிகளான பொன்னேரி மற்றும் கும்மிடிப்பூண்டி போன்ற இடங்களில் இந்த மேகங்களின் தாக்கத்தால் மழை பெய்வதற்கான நல்ல வாய்ப்புகள் உள்ளன.

    தமிழ்நாட்டின் தெற்குப் பகுதிகள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மேற்கு பகுதிகளிலும் பரவலாக இடிமின்னல் மேகங்கள் தென்படுகின்றன. அண்டை மாநிலமான கேரளாவில் சில பகுதிகளிலும் தற்பொது இடி மின்னலுடன் கூடிய மழைக்கான சூழல் நிலவுகிறது என்று COMK தனியார் வானிலை ஆய்வு x பக்கத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

    Advertisement

    மேலும் காற்றின் திசை மாறுபாடு அல்லது மேகங்களின் நகர்வை பொறுத்து, இன்று மாலை அல்லது இரவு நேரத்தில் மேலும் பல இடங்கள் இந்த இடிமின்னல் மழையின் கீழ் வரக்கூடும். அதாவது தற்போதைக்கு மழை இல்லாத பிற பகுதிகளிலும் மாலைக்கு மேல் இடியுடன் கூடிய மழை தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளன என்றும் COMK அப்டேட்டில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

    முன்னதாக இன்று மதியம் வெளியாகியிருந்த வானிலை அறிவிப்பில், "சுமார் 0.9 கிமீ உயரத்தில் மராத்வாடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சியிலிருந்து மன்னார் வளைகுடா வரை, உள் கர்நாடகா மற்றும் தமிழக பகுதிகள் வழியாக ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது.

    Advertisement

    17-09-2026: நீலகிரி, கோயம்புத்தூர் திண்டுக்கல், தேனி, மதுரை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும்.

    இதர மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, சிவகங்கை மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் புதுவையிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    Advertisement

    சென்னை வானிலை

    (17-09-2026): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37-38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    (18-09-2026): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்" என தெரிவிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    English Summary

    COMK update: The Southwest Monsoon has gradually begun to strengthen in Tamil Nadu. Against this backdrop, private weather forecasters have indicated a possibility of heavy rain in Chennai's suburbs today.