தீவிர புயலாக மாறியது அர்னாப்.. இன்று இரவு கனமழை விடாது.. 6 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

  • சென்னை: வங்கக் கடலில் நிலவிக அர்னாப் புயல் தற்போது தீவிர புயலாக மாறியுள்ளதாகவும், அடுத்த 12 மணி நேரத்தில் அதி தீவிர புயலாக மாறும் எனவும் வானிலை மையம் கணித்துள்ளது. இதனால் தமிழகத்தில் 6 மாவட்டங்களுக்கு இன்று இரவு கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது

    Advertisement

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து பெய்து வருகிறது. நேற்று டெல்டா மாவட்டங்களில் விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்தது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மாவட்டங்களிலும் கனமழை வெளுத்து வாங்கியது.

    Advertisement

    தீவிர புயலாக மாறியது

    இதே போன்று வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த தீவிர காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் தீவிரமடைந்து 'அர்னாப்' புயலாக மாறியுள்ளது. நாளை மறுநாள் அதி தீவிர புயலாக கரையை கடக்க உள்ள நிலையில் தற்போதே நாகப்பட்டினம், காரைக்கால் துறைமுகங்களில் 2-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இதனால் கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக ஏற்கனவே வானிலை மையம் எச்சரித்து இருந்தது.

    விடாது பெய்த மழை.. அழுகும் பயிர்கள்! பருவமழையால் விவசாயிகள் கடும் பாதிப்பு! அரசுக்கு வைத்த கோரிக்கை!

    இந்நிலையில், அர்னாப் புயல் தீவிர புயலாக மாறியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. வங்கக் கடலில் நிலவிய அர்னாப் புயல் தற்போது, விசாகப்பட்டினத்திற்கு கிழக்கு - தென்கிழக்கில் 610 கி.மீ தொலைவிலும், ஒடிசாவின் கோபல்பூருக்கு தென்கிழக்கில் 580 கி.மீ தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.

    Advertisement

    6 மாவட்டங்களுக்கு கனமழை அலர்ட்

    கடந்த 6 மணி நேரத்தில் இந்த புயலானது மேற்கு திசையில் மணிக்கு 15 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. தற்போது இந்த புயல் மேலும் வலுவடைந்து தீவிர புயலாக வலுப்பெற்றுள்ளது. அடுத்த 12 மணி நேரத்தில் அர்னாப் புயல் அதி தீவிர புயலாக மாறக்கூடும். நாளை மறுநாள் புதன்கிழமை காலையில் ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினம் - பாபட்லா இடையே இந்த புயல் கரையை கடக்கக்கூடும்..

    இந்த புயலின் தாக்கத்தால் தமிழகத்தை பொறுத்தவரை கடலோர மாவட்டங்களில் இன்று இரவு கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் கூறியுள்ளது. அதாவது ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகை, திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய ஆறு மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.. என்று கணிக்கப்பட்டுள்ளது.

    Advertisement
    டெல்டாவில் மையம் கொண்ட கனமழை.. இன்னைக்கு பெரிய சம்பவம் இருக்கு! வானிலை மையம் எச்சரிக்கை

    நாளை எங்கெல்லாம் கனமழை பெய்யும்

    முன்னதாக வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில், “இன்று நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கன முதல் மிக கன மழை பெய்யக்கூடும். மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவையிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.

    Advertisement

    நாளை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் வறண்ட வானிலை நிலவக்கூடும்..” என்று கூறப்பட்டு இருந்தது.

    English Summary

    Cyclone Arnab: The India Meteorological Department has forecasted that the cyclonic storm 'Arnab' over the Bay of Bengal has now intensified into a 'severe cyclonic storm' and is expected to develop into an 'extremely severe cyclonic storm' within the next 12 hours. Consequently, an alert has been issued for 6 districts in Tamil Nadu, where heavy rainfall is expected tonight.