அதிதீவிர புயலாகும் அர்னாப்? ஆந்திராவுக்கு காத்திருக்கும் ஆபாத்து! அடுத்த 24 மணி நேரம் திக்திக் தான்!

  • சென்னை: வங்கக்கடலில் தீவிரம் அடைந்துள்ள அர்னாப் புயல் மணிக்கு 17 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வரும் நிலையில் அடுத்த 12 மணிநேரத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து அதி தீவிர புயலாக மாற வாய்ப்புள்ளதாகவும், இந்த புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து, அக்டோபர் 28ஆம் தேதி காலை ஆந்திரப் பிரதேசம் மற்றும் ஏனாம் கடற்கரைப் பகுதிகளுக்கு இடையே ரையைக் கடக்கக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

    Advertisement

    இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, நேற்று த்தியகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று, 1130 மணி அளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக அதே பகுதிகளில் நிலவியது.

    Advertisement

    இது மேற்கு திசையில் நகர்ந்து இன்று காலை மத்தியகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் புயலாக (அர்னாப்) வலுப்பெற்று அதே பகுதிகளில் நிலவியது.

    பின்னர் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று நள்ளிரவுக்குள் மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் தீவிர புயலாகவும், நாளை (27-10-26) மிக தீவிர புயலாக அதே பகுதிகளில் வலுப்பெறக் கூடும். இது மேலும் வடமேற்கு திசையில் நகர்ந்து ஆந்திரப்பிரதேசம் மற்றும் ஏனாம் கடற்கரைப் பகுதிகளில், பாபட்லா மற்றும் விசாகப்பட்டினம் இடையே யானம் பகுதிகளுக்கு அருகில் மிக தீவிர புயலாக கரையை கடக்கக்கூடும்.

    Advertisement

    அர்னாப் புயல் மேற்கு மத்திய வங்கக்கடல் பகுதியில் மணிக்கு 17 கி.மீ. வேகத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று மாலை 5.30 மணியளவில் தீவிர புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்த அர்னாப் புயல் அடுத்த 12 மணி நேரத்தில் அதிதீவிர புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளது.

    தீவிர புயலாக மாறியது அர்னாப்.. இன்று இரவு கனமழை விடாது.. 6 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

    அக்டோபர் 27ஆம் தேதி மாலை வரை மேற்கு-வடமேற்கு திசையில் நகரும் புயல், அதன்பிறகு வடமேற்கு திசையில் நகர்ந்து, அக்டோபர் 28ஆம் தேதி காலை ஆந்திரப் பிரதேசம் மற்றும் ஏனாம் கடற்கரைப் பகுதிகளுக்கு இடையே, பாபட்லா - விசாகப்பட்டினம் இடையே ஏனாம் அருகில் கரையைக் கடக்கக்கூடும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    கரையைக் கடக்கும்போது மணிக்கு 115 முதல் 125 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும், காற்றின் வேகம் மணிக்கு 140 கி.மீ. வரை அதிகரிக்கலாம் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அக்டோபர் 26 மாலை 5.30 மணி நிலவரப்படி, புயல் ஒடிசாவின் கோபால்பூரில் இருந்து தென்கிழக்கே சுமார் 490 கி.மீ., ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் இருந்து தென்கிழக்கே 490 கி.மீ., காக்கிநாடாவில் இருந்து கிழக்கு-தென்கிழக்கே 560 கி.மீ. தொலைவில் மையம் கொண்டிருந்தது. புயலின் நகர்வு மற்றும் தீவிரத்தை வானிலை ஆய்வு மையம் தொடர்ந்து கண்காணித்தும் வருகிறது.

    English Summary

    IMD warns Cyclone Arnab may intensify into an extremely severe cyclonic storm before crossing Andhra Pradesh near Yanam on October 28.