போற போக்குல ஒரு காட்டு காட்டிட்டு போயிருச்சு.. சென்னைக்கு பயத்தை காட்டிய ‘முரசு’! நள்ளிரவில் கனமழை!

  • சென்னை: முரசு புயலின் பலத்த காற்றுக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் சென்னையில் பல்வேறு பகுதிகளில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. கனமழையால் கணேசபுரம் சுரங்கப்பாதையில் மழைநீர் நீர்தேங்கிய நிலையில், வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர். இதனையடுத்து தண்ணீரை அகற்றும் பணிகள் நடைபெற்றது.

    Advertisement

    வங்கக்கடலில் உருவான 'முரசு' தீவிர புயல் ஆந்திர கடலோர பகுதியை நோக்கி நகர்ந்தது. இன்று (3ஆம் தேதி) அதிகாலை 1 மணியளவில் வெற்றிகரமாகக் கரையை கடந்த நிலையில், புயல் கரையை கடந்த போது கடலோர பகுதிகளில் பலத்த சூறாவளிக்காற்றுடன் கூடிய கனமழை முதல் மிகக் கனமழை பெய்துள்ளது.

    Advertisement

    அந்த வகையில், சென்னையில் முரசு புயல் காரணமாக நேற்று இரவு முதல் பலத்த காற்றுடன் விட்டுவிட்டு கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நகரின் பல்வேறு தாழ் வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ள நிலையில், பலத்த காற்றுக்கு தாக்குப் பிடி க்க முடியாமல் ஆங்காங்கே மரங்களும் முறிந்து விழுந்தன

    முரசு புயல்

    அந்த வகையில், சென்னை திரு.வி.க. நகர் மண்டலத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதி களில் மொத்தம் நான்கு மரங்கள் வேரோடு சாய்ந்தன. குறிப்பாக, பெரம்பூர் பள்ளி சாலையில் சுமார் 30 ஆண்டுகள் பழமையான வேப்ப மரம் இன்று மாலை திடீரென வேரோடு சாய்ந்து விழுந்தது.

    Advertisement

    சென்னையில் கனமழை

    இதில் சாலையோரம் நிறுத்தி வைக்கப் பட்டிருந்த இருசக்கர வாகனம் மரத்தடியில் சிக்கி சேதமடைந்தது.
    தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மாநகராட்சி ஊழியர்கள், விழுந்த மரத்தை துண்டு துண்டாக வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதேபோன்று திரு.வி.க. நகர் மண்டலத் தின் மற்ற பகுதிகளில் விழுந்த மூன்று மரங்களையும் மாநகராட்சி ஊழியர்கள் அகற்றினர்.

    பருவமழை தீவிரம்

    மேலும், வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்குவதைத் தடுக்கும் வகையில் மாநகராட்சி சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, சென்னை மண்டலத்திற்குட்பட்ட கணேசபுரம் சுரங்கப்பாதை மற்றும் வியாசர்பாடி ஜீவா பகுதியில் மழைநீர் தேங்கியுள்ள இடங்களில் மோட்டார் பம்புகள் மூலம் தண்ணீரை வெளியேற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    Advertisement

    அமைச்சர்கள் ஆய்வு

    இந்தப் பணிகளை அதிகாரிகளுடன் அமைச்சர்களும் நேரில் சென்று ஆய்வு செய்தனர். குறிப்பாக, கணேசபுரம் சுரங்கப்பாதையில் தேங்கியுள்ள மழைநீரை விரைந்து அகற்றி, பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் எவ்வித சிரமமும் இன்றி பயணிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சர் லோகேஷ் அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்.

    முன்னெச்சரிக்கை

    மேலும், வியாசர்பாடி ஜீவா பகுதியில் மழைநீர் வெளியேற்றும் பணிகள் நடைபெற்று வரும் இடத்தையும் பார்வையிட்ட அமைச்சர், தேங்கியுள்ள மழைநீரை உடனடியாக அகற்றுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார். வடகிழக்குப் பருவமழையால் சென்னை மாநகரின் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்காமல் இருக்கவும், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாமல் இருக்கவும் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

    English Summary

    Heavy rain and strong winds from Cyclone Murasu topple trees across Chennai, flood Ganeshapuram subway and disrupt traffic.