சென்னை: தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலை கொண்டுள்ள தீவிரக் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், இன்று மேலும் வலுப்பெற்று 'முரசு' (Cyclone Murasu) என்ற புதிய புயலாக மாறுகிறது. அடுத்தடுத்து உருவாகும் புயல்களால் கடலோரப் பகுதிகளில் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. இந்த புயல் எப்போது உருவாகும், எங்கு நகரும், தமிழகத்திற்கு ஏதேனும் பாதிப்பு உண்டா என்பது குறித்த முழுமையான விவரங்களை விரிவாகப் பார்ப்போம்.
'முரசு' புயல் இப்போது எங்கே இருக்கிறது?
இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) வெளியிட்டுள்ள தகவலின்படி, வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் தீவிரமடைந்து வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து வருகிறது. இது சென்னைக்கு கிழக்கு-தென்கிழக்கே சுமார் 960 கி.மீ தூரத்திலும், ஆந்திராவின் விசாகப்பட்டினத்திற்கு தென்கிழக்கே 980 கி.மீ தூரத்திலும் மையம கொண்டுள்ளது.
வானிலை மையத்தின் கணிப்பின்படி, இந்தத் தீவிர காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் இன்று தென்கிழக்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் புயலாக வலுப்பெறுகிறது. புயலாக உருவான பிறகு, இது தொடர்ந்து மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து ஆந்திர கடற்கரையை நோக்கிச் செல்லும். உலக வானிலை அமைப்பின் வழிகாட்டுதலின்படி, வட இந்தியப் பெருங்கடல் மற்றும் வங்கக்கடல் பகுதிகளில் உருவாகும் புயல்களுக்கு இப்பகுதியைச் சுற்றியுள்ள 13 நாடுகள் சுழற்சி முறையில் பெயர்களை வழங்குகின்றன. அந்த வகையில், இந்தப் புயலுக்கு 'முரசு' (Murasu) என்ற பெயரை இந்தியா வழங்கி உள்ளது. தமிழில் முரசு என்பது பாரம்பரிய இசைக்கருவி அல்லது அறிவிப்புக் கருவியைக் குறிக்கும் சொல். வங்கக்கடலில் புயலாக மாறும் முரசு, ஆந்திர கடற்கரையை நோக்கி நகர்ந்து நாளை (நவம்பர் 2) மாலையில் மேற்கு மத்திய வங்கக்கடல் பகுதியை அடையும். அதன்பின்னர், நவம்பர் 3-ஆம் தேதி வாக்கில் ஆந்திராவின் நெல்லூர் மற்றும் நரசாபூர் இடையே தீவிரப் புயலாக கரையை கடக்கக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. புயல் கரையை கடக்கும் சமயத்தில் மணிக்கு 90 முதல் 110 கி.மீ வேகத்திலும், சில நேரங்களில் 120 கி.மீ வரை பலத்த காற்று வீசக்கூடும். இதனால் கடலோர ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசா பகுதிகளில் மிகக் கடுமையான கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புயலின் நகர்வுப் பாதை ஆந்திராவை நோக்கி இருப்பதால், தமிழகத்திற்கு நேரடித் தாக்குதல் அல்லது புயல் கரையை கடக்கும் அபாயம் இல்லை. புயல் சின்னம் காரணமாக வட தமிழக கடலோர மாவட்டங்கள், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய பகுதிகளில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது. வங்கக்கடல் பகுதி மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும் என்பதால், மணிக்கு 45 முதல் 55 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். மறு அறிவிப்பு வரும் வரை மத்திய மேற்கு வங்கக்கடல், ஆந்திரா மற்றும் வட தமிழக கடலோரப் பகுதிகளுக்கு மீனவர்கள் யாரும் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் திட்டவட்டமாக அறிவுறுத்தியுள்ளது. புயல் ஆந்திராவை நோக்கிச் சென்றாலும், கடலோரப் பாதுகாப்பு மற்றும் அவசர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் தமிழக அரசு மற்றும் பேரிடர் மீட்புக் குழுவினர் தயார் நிலையில் உள்ளனர். மக்கள் அதிகாரப்பூர்வ வானிலை அறிவிப்புகளைப் பின்பற்றிப் பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.புயல் எப்போது உருவாகும்?
இந்த புயலுக்கு 'முரசு' என்ற பெயர் எப்படி வந்தது?
புயல் எங்கு கரையை கடக்கும்?
தமிழகம் மற்றும் சென்னைக்கு பாதிப்பு உண்டா?
புதிய புயல் சின்னம்! தீபாவளிக்கு மழை இருக்குமா? வானிலை மையம் கொடுத்த அப்டேட்