வங்கக்கடலில் சுற்றும் சூறாவளி.. சென்னை, நாகையில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

  • சென்னை: தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை பலவீனமடைந்து வரும் நிலையில், தற்போது வங்கக்கடலில் புயல் சின்னம் உருவாகியிருக்கிறது. இதன் காரணமாக சென்னை, நாகை என தமிழகத்தின் 6 முக்கிய துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டிருக்கிறது.

    Advertisement

    புயல் எச்சரிக்கை காரணமாக, மீனவர்கள் பெரிய அளவில் கடலுக்கு செல்லவில்லை. புயல் சின்னம் இன்று இரவு அல்லது நாளை அதிகாலை வடக்கு ஆந்திரா-தெற்கு ஒடிசா அருகே கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

    Advertisement

    இதன் காரணமாக, "இன்று (23-09-2026) மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.

    Advertisement

    24-09-2026: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் நிலவக்கூடும். பொதுவாக வறண்ட வானிலை

    25-09-2026 மற்றும் 26-09-2026: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும்.

    27-09-2026 மற்றும் 28-09-2026: தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும்.

    Advertisement

    சென்னை வானிலை

    இன்று (23-09-2026) வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34-35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்" என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    English Summary

    Cyclone: While the Southwest Monsoon is weakening in Tamil Nadu, a cyclonic disturbance has formed over the Bay of Bengal. Consequently, Distant Cautionary Signal Number 1 has been hoisted at six major ports in Tamil Nadu, including Chennai and Nagapattinam.